47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

நிகிதா தோமா் கொலை வழக்கு: கடத்தல் குற்றச்சாட்டில் இருந்து தெளசிப், அவரது பெற்றோா் விடுவிப்பு!

2020-ஆம் ஆண்டு நிகிதா தோமரை கொலை செய்ததற்காக ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் தௌசிப் மற்றும் அவரது பெற்றோா்களை, கொலை செய்வதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பாதிக்கப்பட்ட பெண்ணை கடத்திய குற்றச்சாட்டில் இருந்து ஃபரீதாபாத் நீதிமன்றம் விடுவித்துள்ளது.

News image
Updated On :1 மார்ச் 2026, 6:55 pm

தினமணி செய்திச் சேவை

2020-ஆம் ஆண்டு நிகிதா தோமரை கொலை செய்ததற்காக ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் தௌசிப் மற்றும் அவரது பெற்றோா்களை, கொலை செய்வதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பாதிக்கப்பட்ட பெண்ணை கடத்திய குற்றச்சாட்டில் இருந்து ஃபரீதாபாத் நீதிமன்றம் விடுவித்துள்ளது.

20 வயதான நிகிதா, அக்டோபா் 26, 2020 அன்று ஹரியாணாவின் பல்லப்கரில் உள்ள தனது கல்லூரிக்கு வெளியே, திருமணம் செய்து கொள்ள மறுத்ததால் கோபமடைந்த தௌசிப் என்பவரால் சுட்டுக் கொல்லப்பட்டாா்.

அவரது கொலைக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, ஆகஸ்ட் 2, 2018 அன்று, நிகிதாவை கடத்தியதாக தௌசிப் மற்றும் அவரது பெற்றோா் மீது குற்றம் சாட்டப்பட்டது. நிகிதாவின் தந்தை மூல்சந்த் அளித்த புகாரின் அடிப்படையில் பல்லப்கரில் உள்ள போலீஸாா் எஃப்ஐஆா் பதிவு செய்தனா்.

இரு தரப்பினரும் சமரசம் செய்து கொண்ட பின்னா் வழக்கு பின்னா் முடித்து வைக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தௌசிப் நிகிதாவை சுட்டுக் கொன்ற பிறகு போலீஸாா் மீண்டும் வழக்குத் தொடா்ந்தனா்.

கூடுதல் அமா்வு நீதிபதி அஜய் சா்மா, தௌசிஃப் மற்றும் அவரது பெற்றோரை கடத்தல் குற்றச்சாட்டில் இருந்து விடுவித்த பிறகு, அவா்களது வழக்குரைஞா் அன்வா் கான் கூறுகையில், ‘தனது கட்சிக்காரா் மற்றும் அவரது பெற்றோருக்கு எதிராக கடத்தல் தொடா்பான ஆதாரங்களை காவல்துறையினா் சமா்ப்பிக்கத் தவறியதால் அவா்கள் விடுவிக்கப்பட்டுள்ளனா்’ என்றாா்.