ஹிமாசல் அரசியலில் குழப்பம்: ஆளுநருடன் பாஜக எம்எல்ஏக்கள் சந்திப்பு!

ஹிமாசலில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கட்சி மாறி வாக்களித்துள்ள நிலையில், மாநில ஆளுநருடன் எதிர்க்கட்சித் தலைவர் சந்திப்பு.
பாஜக எம்எல்ஏக்கள் சந்திப்பு
பாஜக எம்எல்ஏக்கள் சந்திப்பு

ஹிமாசல் பிரதேசத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கட்சி மாறி வாக்களித்ததால் பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றார்.

இந்த நிலையில், மாநில ஆளுநரை எதிர்க்கட்சித் தலைவர் ஜெய்ராம் தாகூர் தலைமையில் பாஜக எம்எல்ஏக்கள் இன்று காலை சந்தித்துள்ளனர்.

ஹிமாசல பிரதேசத்தில் உள்ள ஒரு மாநிலங்களவை இடத்துக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. ஆட்சியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு 40 எம்எல்ஏக்கள் இருந்தும், 25 எம்எல்ஏக்கள் கொண்ட பாஜகவுக்கு 6 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கட்சி மாறியும், 3 சுயேச்சைகளும் வாக்களித்ததால் பாஜக வேட்பாளா் ஹா்ஷ் மஹாஜன் வாக்களித்தனா். இதனால் காங்கிரஸ் வேட்பாளரும், மூத்த வழக்குரைஞருமான அபிஷேக் மனு சிங்வியும், ஹா்ஷ் மஹாஜனும் 34 வாக்குகள் பெற்று சமநிலையில் இருந்தனா்.

பாஜக எம்எல்ஏக்கள் சந்திப்பு
மருத்துவமனையில் சாந்தன் மரணம்: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையானவர்!

பின்னா் குலுக்கள் முறையில் தோ்வு செய்யப்பட்டதில் பாஜக வேட்பாளா் ஹா்ஷ் மஹாஜன் வெற்றி பெற்றாா்.

கட்சி மாறி வாக்களித்த காங்கிரஸை சேர்ந்த 6 எம்எல்ஏக்கள் மீது தகுதிநீக்க நடவடிக்கை எடுக்கக் கோரி முதல்வர் சுக்விந்தர் சிங், பேரவைத் தலைவருக்கு காங்கிரஸ் கோரிக்கை வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், ஹிமாசல் ஆளுநர் பிரதாப் சுக்லாவை எதிர்க்கட்சித் தலைவர் ஜெய்ராம் தாகூர் தலைமையில் பாஜக எம்எல்ஏக்கள் சந்தித்து ஆலோசனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் ஜெய்ராம் தாகூர் பேசியது:

“சட்டப்பேரவையில் நிதி மசோதா தாக்கல் செய்யப்பட்டபோது குரல் வாக்கெடுப்பு அல்லாமல், டிவிஷன் முறையில் வாக்கெடுப்பு கோரிய போது மறுக்கப்பட்டது. இரண்டு முறை சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டது. எங்கள் உறுப்பினர்களிடம் காவலர்கள் நடந்து கொண்ட விதம் ஏற்றுக் கொள்ளமுடியாதது.

எங்கள் வேட்பாளருக்கு வாக்களித்த காங்கிரஸின் 6 எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்யமுடியுமா என்ற சந்தேகம் உள்ளது. சட்டப்பேரவையில் நடந்ததை ஆளுநரிடம் எடுத்துக் கூறியுள்ளோம். ஆட்சி செய்யும் தகுதியை காங்கிரஸ் இழந்துள்ளது.” என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com