ஹிமாசலில் 6 காங். எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம்!

ஹிமாசல் பிரதேசத்தில் காங்கிரஸின் 6 சட்டப்பேரவை உறுப்பினர்கள் தகுதிநீக்கம்.
ஹிமாசல் முதல்வர் சுக்விந்தர் சிங்
ஹிமாசல் முதல்வர் சுக்விந்தர் சிங்

ஹிமாசல பிரதேசத்தில் நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில் கட்சி மாறி வாக்களித்த 6 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

ஹிமாசல பிரதேசத்தில் உள்ள ஒரு மாநிலங்களவை இடத்துக்கான தேர்தல் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஆட்சியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு 40 எம்எல்ஏக்கள் இருந்தும், 25 எம்எல்ஏக்கள் கொண்ட பாஜகவுக்கு 6 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கட்சி மாறியும், 3 சுயேச்சைகளும் வாக்களித்ததால் பாஜக வேட்பாளா் ஹா்ஷ் மஹாஜன் வெற்றி பெற்றார்.

இது காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் இடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ஹிமாசல் முதல்வர் சுக்விந்தர் சிங்
ஹிமாசலில் காங்கிரஸ் ஆட்சி தப்புமா? உச்சகட்ட பரபரப்பு

இதற்கிடையே, மாநில முதல்வர் சுக்விந்தர் சிங்குக்கு எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர் பதவியில் இருந்து விக்ரமாதித்ய சிங் ராஜிநாமா செய்தார்.

காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால் ஆட்சி கவிழும் சூழல் ஏற்பட்டதை தொடர்ந்து, அக்கட்சியின் மேலிடப் பொறுப்பாளர்கள் சிம்லாவில் முகாமிட்டு ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், கட்சி மாறி வாக்களித்த காங்கிரஸின் 6 எம்எல்ஏக்களை கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தகுதிநீக்கம் செய்வதாக சட்டப்பேரவைத் தலைவர் குல்தீப் சிங் அறிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com