

கர்நாடகத்தின் கடலோர மாவட்டங்களில் கடந்த 24 மணி நேரத்தில் கனமழை பதிவாகியுள்ளதையடுத்து, மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தக்ஷிண கன்னடா மற்றும் உடுப்பி ஆகிய கடலோர மாவட்டங்களில் கனமழை முதல் மிதமான மழை வரை பெய்து வருகின்றது.
கடல் மட்டத்திலிருந்து சுமார் 5.8 கி.மீட்டரில் குறைந்த காற்றழுத்த தாழ்வு ஒன்று உருவாகியுள்ளது. இதன் காரணமாக இரு மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகின்றது.
பண்ட்வால், பெல்தங்கடி தாலுகாக்களில் பலத்த மழையும், தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தர கன்னடா மற்றும் குடகு மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்பதால் கடலோரப் பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.