தில்லியை உறைய வைத்த கடும் குளிர்!

தேசியத் தலைநகரின் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் புதன்கிழமை கடும் குளிர் மற்றும் மிதமான பனிமூட்டம் காணப்பட்டது, குறைந்தபட்ச வெப்பநிலை 7 டிகிரி செல்சியஸ் ஆக இருந்தது.
தில்லியை உறைய வைத்த கடும் குளிர்!


புது தில்லி: தேசியத் தலைநகரின் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் புதன்கிழமை கடும் குளிர் மற்றும் மிதமான பனிமூட்டம் காணப்பட்டது, குறைந்தபட்ச வெப்பநிலை 7 டிகிரி செல்சியஸ் ஆக இருந்தது.

தில்லியில் திங்கள்கிழமை இந்த மாதத்தின் மிகக் குளிரான நாளாகப் பதிவானது, குறைந்தபட்ச வெப்பநிலை 5.3 டிகிரி செல்சியஸாகக் குறைந்திருந்தது. இது பருவத்தின் சராசரியை விட இரண்டு புள்ளிகள் குறைவாகவும். கிட்டத்தட்ட நைனிடாலின் மலைவாசஸ்தலத்தைப் போலவே இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) தெரிவித்திருந்ததது.

இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பின்படி, நகரம் முழுவதும் புதன்கிழமை கடும் குளிர் மற்றும் தெளிவான வானத்துடன் மிதமான பனிமூட்டம் காணப்பட்டது, நகரின் சில பகுதிகளில் "மிகக் குளிர் நாள்" நிலைமைகளுக்காக மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பனிமூட்டம் காரணமாக தில்லியில் இருந்து புறப்படும் 18 ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன.

தில்லியின் 24 மணி நேர காற்றுத் தரக் குறியீடு செவ்வாய்க்கிழமை 366 ஆக இருந்தது.

பூஜ்ஜியத்திற்கும் 50க்கும் இடைப்பட்ட காற்றுத் தரக் குறியீடு நல்லதாகவும், 51 மற்றும் 100 திருப்திகரமானதாகவும், 101 மற்றும் 200 மிதமானதாகவும், 201 மற்றும் 300 மோசமானதாகவும், 301 மற்றும் 400 மிகவும் மோசமானதாகவும், 401 மற்றும் 500 கடுமையானதாகவும் கருதப்படுகிறது.

வெப்பநிலை சரிவுக்கு மத்தியில், நகர்ப்புற தங்குமிட மேம்பாட்டு வாரியம், வீடற்றர்களை இரவில் தங்க வைப்பதற்காக நகரம் முழுவதும் 190 சிறப்பு கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கூடாரங்களில் சுமார் 8 ஆயிரம் பேர் இரவில் தங்கியுள்ளனர். ஒவ்வொரு தங்குமிடத்திலும் ஒரு பராமரிப்பாளா் உள்ளாா். அவா் தினமும் எட்டு மணி நேரம் பணியில் இருப்பாா். ஒரு பெண் பாதுகாவலாளியும் இருப்பாா்.மேலும் அவர்களுக்கான மருத்துவக்குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com