குடியரசு நாள் அணிவகுப்பு ஒத்திகை: இந்தியா கேட் அருகே போக்குவரத்து பாதிப்பு

குடியரசு நாள் அணிவகுப்பு ஒத்திகை: இந்தியா கேட் அருகே போக்குவரத்து பாதிப்பு

குடியரசு நாள் அணிவகுப்பு ஒத்திகை காரணமாக, மத்திய தில்லியில் உள்ள இந்தியா கேட் அருகே ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக மூன்றாவது நாளாக போக்குவரத்து பாதிக்கப்படும்
Published on


புது தில்லி: குடியரசு நாள் அணிவகுப்பு ஒத்திகை காரணமாக, மத்திய தில்லியில் உள்ள இந்தியா கேட் அருகே ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக மூன்றாவது நாளாக போக்குவரத்து பாதிக்கப்படும் என்று போலீஸார் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.

இது தொடா்பாக போக்குவரத்து போலீஸாா் மக்களுக்கு அறிவுறுத்தல்களை வெளியிட்டிருந்தனா். அதன்படி, எக்ஸ்  சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

குடியரசு நாள் அணிவகுப்பு ஒத்திகை காரணமாக, மத்திய தில்லியில் உள்ள இந்தியா கேட் அருகே மூன்றாவது நாளாக ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்படும்.

விஜய் சௌக் மற்றும் மைல்கல்லை ஒட்டிய கிராசிங்குகளை தவிா்க்குமாறு மக்களுக்கு தில்லி போக்குவரத்து போலீஸாா் அறிவுறுத்தியுள்ளனர்.

"குடியரசு நாள் அணிவகுப்பு ஒத்திகை காரணமாக, 12.01.2024 அன்று 7 மணி முதல் 12 மணி வரை விஜய் சௌக், ரஃபி மார்க்-கர்தவ்யாபத் கிராசிங், ஜன்பத்- கர்தவ்யாபத் கிராசிங் மற்றும் மான் சிங் சாலை- கர்தவ்யாபத் கிராசிங் ஆகியவற்றைத் தவிா்க்க வேண்டும்" என்று  பதிவிட்டுள்ளது.

புதன் மற்றும் வியாழக்கிழமைகளிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com