'இந்தியா' கூட்டணிக்கு என்ன கொள்கை இருக்கிறது? : அனுராக் சிங் தாக்குர் கேள்வி

எதிர்க்கட்சிகளின் 'இந்தியா' கூட்டணிக்கு என்ன கொள்கை இருக்கிறது என்று மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்குர் கேள்வி எழுப்பினார்.
அனுராக் சிங் தாக்குர் (கோப்புப்படம்)
அனுராக் சிங் தாக்குர் (கோப்புப்படம்)

எதிர்க்கட்சிகளின் 'இந்தியா' கூட்டணிக்கு என்ன கொள்கை இருக்கிறது என்று மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்குர் கேள்வி எழுப்பினார்.

சனிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்குர் 'இந்தியா' கூட்டணிக்கு கொள்கையும் இல்லை, தலைவரும் இல்லை என்று தெரிவித்தார்.

அவர் பேசியதாவது, “பல்வேறு எதிர்க்கட்சிகள் இணைந்து கூட்டணி அமைத்துள்ளன. 'இந்தியா' கூட்டணியின் கொள்கை என்ன? அவர்களுக்குள் எந்தவித ஒருங்கிணைப்பும் இல்லை. எந்த ஒரு விவகாரத்திலும் அவர்கள் உடன்பட மாட்டார்கள். 

என்ன வகையான கூட்டணி இது? ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வதற்கு கூட தயாராக இல்லாத தலைவர்களின் தன்முனைப்பு மற்றும் ஆணவத்தால் இந்த கூட்டணி இயங்கிவருகிறது.

இந்த ஆணவம் கொண்ட கூட்டணி எதையும் சாதிக்காது. அவர்களுக்கென்று தலைவரும் இல்லை. கொள்கையும் இல்லை. அவர்கள் கூடிய முதல் நாளில் இருந்து அவர்களின் முரண்கள் அப்பட்டமாக தெரிகின்றன.” என்று தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி, மம்தா பானர்ஜி மற்றும் பிற கூட்டணி தலைவர்களுக்கு இடையிலான கருத்து வேறுபாடுகளையும் சுட்டிக் காட்டினார்.

2024 மக்களவைத் தோ்தலில் பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட பிரதான எதிா்க்கட்சிகள் இணைந்து ‘இந்தியா’ என்ற பெயரில் கூட்டணி அமைத்துள்ளன. இந்த கூட்டணியில் உள்ள கட்சிகளின் தலைவர்கள் இதுவரை 4 முறை நேரில் சந்தித்து ஆலோசித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com