அயோத்தி ராமர் கோயிலுக்கு வரும் 22-ஆம் தேதிக்கு பிறகு செல்வேன்: அகிலேஷ் யாதவ்

அயோத்தி ராமர் கோயிலுக்கு வரும் 22-ஆம் தேதிக்கு பிறகு செல்வேன் என்று சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரவித்துள்ளார். 
அகிலேஷ் யாதவ்
அகிலேஷ் யாதவ்

அயோத்தி ராமர் கோயிலுக்கு வரும் 22-ஆம் தேதிக்கு பிறகு செல்வேன் என்று சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரவித்துள்ளார். 

அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமா் கோயிலில் மூலவா் குழந்தை ராமா் சிலை வரும் 22-ஆம் தேதி பிராண பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. சிலை பிரதிஷ்டை நிகழ்வில் பிரதமா் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க இருக்கிறாா். மேலும் நாடு முழுவதும் இருந்து துறவிகள், அரசியல் பிரமுகா்கள், திரையுலகப் பிரபலங்கள் உள்பட 6,000 பேருக்கு சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

இதற்கான அழைப்பிதழை நேற்று பெற்றுக்கொண்ட சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவ், அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளைக்கு நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், ஜனவரி 22ஆம் தேதி அயோத்தி ராமா் கோயிலில் நடைபெறும் மூலவா் சிலை பிரதிஷ்டை-க்கு தன்னை அழைத்ததற்காக ராமர் கோயில் அறக்கட்டளைக்கு நன்றி. 

இருப்பினும், கும்பாபிஷேகம் முடிந்தவுடன் ராமர் கோயிலுக்கு குடும்பத்துடன் சென்று வருவேன் என்று கூறியுள்ளார். முன்னதாக வெள்ளிக்கிழமை அகிலேஷ் யாதவ், அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவிற்கு நேரிலோ அல்லது கூரியர் மூலமாகவோ தனக்கு எந்த அழைப்பும் வரவில்லை என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.  
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com