உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் சிலை பிரதிஷ்டை ஜனவரி 22-ம் தேதி கோலாகலமாக நடைபெற உள்ளது. பிரதிஷ்டை விழாவில் பங்கேற்க பல்வேறு முக்கிய தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் அயோத்தியில் ராமர் கோவில் அமைந்துள்ள இடத்திற்கு அருகே ரூ.14.5 கோடியில் 10 ஆயிரம் சதுர அடி நிலத்தை வாங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மும்பையைச் சேர்ந்த வீட்டு மேம்பாட்டு நிறுவனமான ஹவுஸ் ஆஃப் அபிநந்தன் லோத்தா (The House of Abhinandan Lodha - HoABL) நிறுவனம் அயோத்தி ராமர் கோவிலுக்கு அருகே 51 ஏக்கர் பரப்பளவில் வீட்டு மனை திட்டத்தை செயல்படுத்த உள்ளது. இந்த இடத்தில் ஐந்து நட்சத்திர ஹோட்டலுடன் மிகப் பிரம்மாண்டமான வீடுகள் கட்டப்பட உள்ளன. வருகிற 2028 ஆம் ஆண்டுக்குள் இவை முடிக்கப்படும் என நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க: மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டி: மாயாவதி அறிவிப்பு!
தற்போது, நடிகர் அமிதாப் பச்சன் முதல் ஆளாக இங்கு 14.5 கோடி மதிப்பிலான இடத்தை வாங்கியுள்ளார் எனக் கூறப்படுகிறது. அமிதாப் பச்சன் அயோத்திக்கு அருகே நிலம் வாங்கியிருப்பது பாலிவுட்டில் பேசுபொருளாக மாறியிருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

தம்மம்பட்டி சிவன் கோயிலில் பேவர் பிளாக் பூமி பூஜை விழா!

கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்!

ஈரான் போர்! மத்திய கிழக்கு நாடுகளில் 12ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து: சிபிஎஸ்இ அறிவிப்பு

உலகப் புகழ்பெற்ற மகாமகம் குளத்தில் கழிவு நீர் கலப்பு: பக்தர்கள் அதிர்ச்சி!
வீடியோக்கள்

“Iran USA War; விலைவாசி உச்சம் தொடப் போகிறது?”: Economist Prabhakar | Crude Oil | Price hike
தினமணி வீடியோ செய்தி...

Annamalai Press Meet | விளாத்திகுளம் மாணவி கொலை; முதல்வரின் முழு தோல்வி! | DMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

NDA வில் இணைய விஜய் நிபந்தனை?| TVK Vijay | NDA Alliance | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

Podcast | புதிய கட்சி.. புதிய ஆதரவு.. புதிய உடன்பாடு.. சட்டம் ஒழுங்கு! | News and Views | Epi - 13 |
தினமணி வீடியோ செய்தி...

