அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா: ஜன.22ஆம் தேதி மகாராஷ்டிரத்துக்கு பொதுவிடுமுறை 

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவையொட்டி ஜன.22ம் தேதி பொதுவிடுமுறை அறிவித்து மகாராஷ்டிர அரசு உத்தரவிட்டுள்ளது.
அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா: ஜன.22ஆம் தேதி மகாராஷ்டிரத்துக்கு பொதுவிடுமுறை 

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவையொட்டி ஜன.22ம் தேதி பொதுவிடுமுறை அறிவித்து மகாராஷ்டிர அரசு உத்தரவிட்டுள்ளது.

அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமா் கோயிலில் மூலவரான குழந்தை ராமா் சிலை வரும் திங்கள்கிழமை நண்பகல் 12.30 மணியளவில் ‘பிராண பிரதிஷ்டை’ செய்யப்பட உள்ளது. இந்த வரலாற்று நிகழ்வில் பிரதமா் மோடி உள்பட 8,000-க்கும் மேற்பட்ட சிறப்பு விருந்தினா்கள் பங்கேற்க உள்ளனா். 

இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், ராமர் கோயில் திறப்பு விழாவையொட்டி பல்வேறு மாநிலங்கள் விடுமுறை அறிவித்து வருகின்றன. அந்த வகையில் ‘பிரதிஷ்டை நாளான திங்கள்கிழமையன்று மகாராஷ்டிர அரசு பொதுவிடுமுறை அளித்துள்ளது.

ஏற்கெனவே அன்றைய தினம் நாடு முழுவதும் உள்ள அனைத்து மத்திய அரசு அலுவலகங்கள், நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலை அமைப்புகளுக்கு பிற்பகல் 2.30 மணிவரை அரைநாள் விடுமுறை விடுமுறை அறிவித்து மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com