ராமா் சிலை பிரதிஷ்டை: அரை நாள் விடுமுறை அறிவித்தது ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம்

அயோத்தி ராமர் கோயில் மூலவா் சிலை பிரதிஷ்டை விழாவையொட்டி, நாளை (ஜன. 22) அரை நாள் விடுமுறையை அறிவித்தது ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம்.
ராமா் சிலை பிரதிஷ்டை: அரை நாள் விடுமுறை அறிவித்தது ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம்
Published on
Updated on
1 min read

அயோத்தி ராமர் கோயில் மூலவா் சிலை பிரதிஷ்டை விழாவையொட்டி, நாளை (ஜன. 22) அரை நாள் விடுமுறையை அறிவித்தது ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம்.

உத்தரப் பிரதேசத்தின் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலில் மூலவர் சிலை பிரதிஷ்டை விழா திங்கள்கிழமை நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு நாளை அரைநாள் விடுமுறையை அறிவித்து ஜம்மு காஷ்மீர் பொது நிர்வாகத் துறைச் செயலர் சஞ்சீவ் வர்மா உத்தரவிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ஜனவரி 22ம் தேதி பிற்பகல் 2.30 மணி வரை ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கு அரைநாள் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ராமர் கோயில் சிலை பிரதிஷ்டை விழாவை முன்னிட்டு மத்தியப் பணியாளர் நலத் துறை அமைச்சகம் மத்திய அரசுப் பணியாளர்களுக்கு அரைநாள் விடுமுறை அளித்துள்ளதைப் பின்பற்றி இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, நாடு முழுவதும் உள்ள அனைத்து மத்திய அரசு அலுவலகங்கள், நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலை அமைப்புகளுக்கு திங்கள்கிழமை பிற்பகல் 2.30 மணிவரை அரைநாள் விடுமுறை வழங்கப்படுவதாக மத்திய பணியாளா் நல அமைச்சகம் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com