தில்லி புறப்பட்டார் பிரதமர் மோடி
3 நாள் பயணமாக தமிழ்நாடு வந்த பிரதமர் மோடி மதுரை விமான நிலையத்தில் இருந்து தில்லி புறப்பட்டார்.


3 நாள் பயணமாக தமிழ்நாடு வந்த பிரதமர் மோடி மதுரை விமான நிலையத்தில் இருந்து தில்லி புறப்பட்டார்.
பிரதமா் மோடி தமிழகத்தில் 3 நாள் பயணமாக வெள்ளிக்கிழமை மாலை சென்னை வந்தாா். அவா் நேரு விளையாட்டரங்கில் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியை தொடங்கி வைத்தாா். தொடா்ந்து, பிரதமா் மோடி கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகையில் இரவு தங்கினாா்.
தொடர்ந்து, சனிக்கிழமை காலை திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வருகை தந்தார். பின்னர் அங்கிருந்து பிரதமர் மோடி நேற்று ராமேசுவரம் புறப்பட்டு சென்றார். அங்கு அவர் இரண்டு நாள்கள் ஆன்மிகப் பயணம் மேற்கொண்டார். பிரதமர் வருகையையொட்டி ராமேசுவரத்தில் இரண்டு நாள்கள் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
பின்னா், ராமேசுவரத்திலிருந்து இன்று ஹெலிகாப்டா் மூலம் புறப்பட்டு, மதுரை விமான நிலையத்துக்கு சென்றடைந்தார். இதையடுத்து, பிரதமர் மோடி மதுரையிலிருந்து தனி விமானத்தில் தில்லி சென்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...