
குடியரசு தினத்தை முன்னிட்டு தலைநகர் தில்லியில் மெட்ரோ ரயில் சேவை அதிகாலை 4 மணி முதல் சேவையைத் தொடங்க உள்ளதாக தில்லி மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மெட்ரோ சேவை காலை 6 மணி வரை 30 நிமிட இடைவெளியில் சேவைகள் கிடைக்கும், அதன்பிறகு நாள் முழுவதும் வழக்கமான கால அட்டவணை பின்பற்றப்படும் எனத் தெரிவித்தனர்.
குடியரசு தின விழாவில் பங்கேற்க வருபவர்களுக்கு வசதியாக மெட்ரோ ரயில் சேவை அதிகாலை 4 மணி முதல் தொடங்க உள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.