கொலையானவர் யார்? கண்டறிய உதவிய செயற்கை நுண்ணறிவு

புது தில்லியில் கொலை செய்யப்பட்ட நபரை அடையாளம் காண, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை காவல்துறையினர் பயன்படுத்தி குற்றவாளிகளையும் பிடித்திருப்பது தெரிய வந்துள்ளது.
கொலையானவர் யார்? கண்டறிய உதவிய செயற்கை நுண்ணறிவு

புது தில்லியில் கொலை செய்யப்பட்ட நபரை அடையாளம் காண, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை காவல்துறையினர் பயன்படுத்தி குற்றவாளிகளையும் பிடித்திருப்பது தெரிய வந்துள்ளது.

கொலை செய்யப்பட்ட நபரின் புகைப்படத்தில், அவரது முகம் தெளிவாக இல்லாததால், செயற்கை நுண்ணறிவு மூலம் அவர் கண் திறந்துகொண்டிருப்பது போல படத்தை மாற்றி, பல்வேறு கோணங்களில் போஸ்டர்களை தில்லி முழுவதும் காவல்துறையினர் ஒட்டினர்.

கொலை செய்யப்பட்ட நபரின் உறவினர், காவல்நிலையத்தில் புகாரளிக்க வந்த போது, இந்த போஸ்டரைப் பார்த்து, கொலையானது தனது உறவினர் என்பதை அடையாளம் கண்டுபிடித்துள்ளார்.

பிறகுதான், கொலையான நபர் ஹிதேந்திர சிங் (35) என்பதும், ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்ததும் தெரிய வந்தது. ஜனவரி 10ஆம் தேதி அவர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், சிசிடிவி காட்சிகளைக் கொண்டு அவரது மூன்று நண்பர்களை காவல்துறையினர் கைது செய்தனர். பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் அவர்கள் கொலை செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த வழக்கில், பலியான நபரின் அடையாளத்தை கண்டறிவதுதான் மிகவும் முக்கியமான விஷயமாக இருந்தது. பலியான நபரின் முகம் மாறியிருந்ததால், செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தித்தான் அவர் முகம் இயற்கையான நிறத்தில் மாற்றப்பட்டு, கண் திறந்தபடி ஒருவர் உயிரோடு இருக்கும்போது எடுத்த புகைப்படம் போல மாற்றி போஸ்டர்கள் ஒட்டப்பட்டது. இதன் மூலம் எளிதாக அவர் அடையாளம் கண்டறியப்பட்டுள்ளார்.

பொதுவாக குற்றவாளிகளின் புகைப்படங்கள்தான் பல கோணங்களில் வரையப்படும். ஆனால், இங்கே பலியானவரின் முகம் பல கோணங்களில் உருவாக்கப்பட்டது. இதனால், அவரது உறவினர்கள் எளிதாக அடையாளம் கண்டுபிடித்தனர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

கொலையான நபர், அவரது நண்பர்களுடன் இருந்ததைக் கண்டுபிடித்த காவல்துறையினர், அவர்களில் ஒருவரைத் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். பிறகு மூன்று பேரின் கைப்பேசிகளும் அணைக்கப்பட்டதால் காவல்துறைக்கு சந்தேகம் வலுத்தது. உடடியான அனைவரின் வீடுகளையும் சோதனை நடத்திய காவல்துறையினர், மூன்று பேரையும் கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com