ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி தனித்துப் போட்டியிடும்: சுஷில் குப்தா

ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தனித்துப் போட்டியிடும் என்று மாநிலங்களவை உறுப்பினர் சுஷில் குப்தா தெரிவித்துள்ளார்.
சுஷில் குப்தா
சுஷில் குப்தா

ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தனித்துப் போட்டியிடும் என்று மாநிலங்களவை உறுப்பினர் சுஷில் குப்தா தெரிவித்துள்ளார்.

இன்னும் சில மாதங்களில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஆளும் பாஜக கூட்டணியை எதிராக காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இணைந்து இந்தியா என்ற பெயரில் கூட்டணி அமைத்துள்ளன.

இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி மேற்குவங்கத்தில் தனித்துப் போட்டியிடுவதாக சமீபத்தில் அறிவித்தார்.

மேலும் பிகாரில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதீஷ் குமார் மீண்டும் பாஜக கூட்டணியில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. 

இந்நிலையில் கூட்டணி குறித்து செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை பேசிய ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சுஷில் குப்தா வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தனித்துப் போட்டியிடுவதாக தெரிவித்துள்ளார். 

அவர் பேசியதாவது, “ஹரியாணாவில் வரவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் 90 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி கட்சி தனித்துப் போட்டியிடும். மக்களவைத் தேர்தலிலும் எங்களின் நிலைப்பாட்டை தேசியத் தலைமையிடம் தெரிவிப்போம். 

ஹரியாணா மாநிலத்தில் நாங்கள் வலுவாக உள்ளோம். எங்களால் தனியாகவும் போட்டியிட முடியும், கூட்டணியிலும் போட்டியிட முடியும். இறுதி முடிவினை கட்சித் தலைமையே எடுக்கும்.” என்று கூறினார்.

இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளின் தலைவர்கள் தேர்தலில் போட்டியிடுவது குறித்து தன்னிச்சையாக அறிவித்து வருவது கூட்டணிக்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com