நிதீஷ் குமாரின் வருகையால் மகிழ்ச்சி அடையப் போவதில்லை: மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்

நிதீஷ் குமார் பாஜக கூட்டணிக்கு வந்தால் மகிழ்ச்சி அடையப் போவதில்லை என்று மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
கிரிராஜ் சிங் (கோப்புப்படம்)
கிரிராஜ் சிங் (கோப்புப்படம்)

நிதீஷ் குமார் பாஜக கூட்டணிக்கு வருவதால் மகிழ்ச்சியும் இல்லை, கவலையும் இல்லை என்று மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதீஷ் குமார் மீண்டும் பாஜக கூட்டணிக்கு செல்ல உள்ளதாக கூறப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இதுகுறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங், “நான் யாரையும் வரவேற்கவும் இல்லை, யாருக்கும் எதிராகவும் இல்லை.

கட்சியின் மத்திய தலைமையின் முடிவுக்கு கட்டுப்படுவேன். பாஜக தலைமை என்ன முடிவெடுத்தாலும், அது பிகார் மாநிலம் மற்றும் கட்சியின் நன்மைக்கானதாக இருக்கும் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். 

ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதீஷ் குமார் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வந்தால், அதனால் மகிழ்ச்சி அடையப் போவதும் இல்லை, கவலை அடையப் போவதும் இல்லை. நான் பாஜகவின் தொண்டன். கட்சியின் முடிவுக்கு கட்டுப்பட்டு நடப்பேன்.” என்று தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், “இந்தியா என்றொரு கூட்டணியே இல்லை. அதுவொரு சந்தர்ப்பவாத கூட்டணி மட்டுமே. அவர்கள் சனாதனக் கொள்கைக்கு எதிராக வேலை செய்யக்கூடிய ஒரு கூட்டணி.” என்று கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com