கோயில் வழிபாட்டு நிகழ்வில் விபத்து, ஒருவர் உயிரிழப்பு!

தில்லியில் கால்காஜி கோயிலில் மத வழிபாட்டு நிகழ்வில் ஏற்பட்ட விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். 
கோயில் வழிபாட்டு நிகழ்வில் விபத்து, ஒருவர் உயிரிழப்பு!

தில்லியில் கால்காஜி கோயிலில் நடைபெற்ற மத வழிபாட்டு நிகழ்வில் ஏற்பட்ட விபத்தில் பெண் ஒருவர் உயிர்ழந்துள்ளார், 17 பேர் காயமடைந்துள்ளனர். 

கடந்த சனிக்கிழமை தில்லியில் உள்ள கால்காஜி கோயிலில் நடந்த மத வழிபாட்டு நிகழ்வில் 1600 பேர் பலந்துகொண்டனர். இந்த விழாவிற்காக எந்த முன்னனுமதியும் வழங்கப்படவில்லை என துணை காவல்கண்காணிப்பாளர் ராஜேஷ் டியோ தெரிவித்துள்ளார். 

திங்கள் கிழமை அதிகாலை 12.30 மணியளவில் இந்த விபத்து நடந்துள்ளது. இரும்புசட்டத்தால் தாங்கப்படும் மரத்தாலான மேடை ஒன்று, விழா ஒருங்கிணைப்பாளர்களின் குடும்பத்தினருக்கும், முக்கிமானவர்களுக்காகவும் அமைக்கப்பட்டிருந்தது.

அந்த மேடை எடை தாங்காமால நிலை குலைந்ததால் விபத்து ஏற்பட்டுள்ளது.  இடிந்த அந்த மேடை கீழே உட்கார்ந்திருந்தவர்கள் மீது விழுந்துள்ளது. 

தீயணைப்புப்படையினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. விபத்தில் காயப்பட்டவர்கள் அனைவரும் தனியார் மருத்துவமனைகளில் உடனடியாக அனுமதிக்கப்பட்டனர். அதில் 45 வயதான பெண் ஒருவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 17 பேர் காயமடைந்துள்ளனர்.

விழா ஒருங்கிணைப்பாளர்கள் மீது மூன்று சட்டப்பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளதாக டிசிபி தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com