விஷ்ணுவின் 11ஆவது அவதாரமாக மாற நினைக்கிறார் மோடி!: கார்கே

கடவுள் விஷ்ணுவின் 11 ஆவது அவதாரமாக மாற மோடி நினைக்கிறார் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கூறியுள்ளார். 
மல்லிகார்ஜுன் கார்கே
மல்லிகார்ஜுன் கார்கே

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக-வை தோல்வியடையச் செய்யுங்கள் என மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். மதத்தின் பேரால் பாஜக வெற்றிபெற அனுமதிக்கக்கூடாது எனக் கூறியுள்ளார். 

மேலும், ' மோடி, விஷ்ணுவின் 11 ஆவது அவதாரமாக மாற நினைக்கிறார்' எனக் கூறினார். உத்தரகாண்டில் மக்களவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் பிரச்சாரத்தை பேரணியில் துவங்கி வைத்த கார்கே, மதத்தின் பேரால் பாஜகவை வெற்றியபெற அனுமதிக்கக்கூடாது என மக்களைக் கேட்டுக்கொண்டார். 

'காங்கிரஸ் தலைவர்கள் இந்த நாட்டுக்காக எத்தனையோ தியாகங்களைச் செய்துள்ளனர். பாஜக இந்நாட்டுக்காக என்ன தியாகம் செய்தது' எனக் கேள்வி எழுப்பினார்.

'இந்தியாவின் ஒற்றுமைக்காக இந்திரா கந்தியும், ராஜீவ் காந்தியும் தங்கள் உயிரைத் தியாகம் செய்தனர். மகாத்மா காந்தியும், நேருவும் இந்திய விடுதலைக்காக பல ஆண்டுகளை சிறையில் கழித்தனர். பாஜக இந்தியாவிற்காக என்ன செய்தது' எனக் கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com