2025ஆம் ஆண்டு நடைபெற உள்ள பிகார் சட்டப்பேரவை தேர்தல் வரைக்குமே பாஜக - ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி நீடிக்காது என்று பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.
இந்தியா கூட்டணியில் அங்கம் வகித்துவந்த ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதீஷ் குமார், திடீரென அதில் இருந்து விலகி, மீண்டும் பாஜக உடன் கைகோர்த்தார்.
இதையும் படிக்க | யுஜிசி வரைவு விதிகளை திரும்பப் பெற வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
இன்று (ஜன.28) காலையில் முதல்வர் பதவியை ராஜிநாமா செய்த நிதீஷ் மாலையில் பாஜக ஆதரவுடன் பிகார் மாநில முதல்வராக மீண்டும் பதவியேற்றுக் கொண்டார். அவருடன் பாஜகவைச் சேர்ந்த சாம்ராட் சௌதரி மற்றும் விஜய் குமார் சின்ஹா ஆகிய இருவரும் துணை முதல்வராகப் பதவியேற்றனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பிரசாந்த் கிஷோர், “நிதீஷ் குமாரின் இந்த திடீர் மாற்றம் எந்தவித ஆச்சரியத்தையும் ஏற்படுத்தவில்லை. மகாகட்பந்தனில் அவர் இணைந்தபோதே, அந்தக் கூட்டணியில் அவர் நீடிக்க மாட்டார் என்று கூறினேன்.
நிதீஷைப் போலவேதான் பாஜகவும் சந்தர்ப்பவாத அரசியல் செய்கிறது. மக்களவைத் தேர்தலை கணக்கில் வைத்து பாஜக இந்த முடிவை எடுத்துள்ளது. ஆனால் இதனால் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக பெரிய விலை கொடுக்க நேரிடும்.
2024 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு நிதீஷ் குமார் எந்த வழியில் செல்வார் என்று யாராலும் சொல்ல முடியாது. நிச்சயமாக பாஜக - ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி 2025ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் வரை நீடிக்காது. இன்னும் சொல்லப்போனால், மக்களவைத் தேர்தல் முடிந்த ஓரிரு மாதங்களிலேயே இந்தக் கூட்டணி முறியும்.” என்று கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
நேபாளத்தில் கலவரம்: உ.பி.யில் 7 மாவட்டங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு!

இன்றைய முக்கிய செய்திகள் ஆகஸ்ட் 3 - நேரலை!

மேக்மைட்ரிப் முதல் காலாண்டு லாபம் 8.6% அதிகரிப்பு!

பிரசாந்த் கிஷோருக்கு மு.க. ஸ்டாலின் வாழ்த்து!
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



