மகாராஷ்டிரம்: சிவசேனை எம்எல்ஏ அனில் பாபர் காலமானார்

மகாராஷ்டிரம்: சிவசேனை எம்எல்ஏ அனில் பாபர் காலமானார்

மகாராஷ்டிரம் மாநிலம் கானாபூர் சட்டப்பேரவை உறுப்பினர் அனில் பாபர், உடல்நலக்குறைவுக் காரணமாக மருத்துவமனையில் புதன்கிழமை காலமானார்.
Published on

சாங்லி (மகாராஷ்டிரம்): மகாராஷ்டிரம் மாநிலம் கானாபூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் அனில் பாபர், உடல்நலக்குறைவுக் காரணமாக மருத்துவமனையில் புதன்கிழமை காலமானார்.

மகாராஷ்டிரம் மாநிலம் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அணியைச் சேர்ந்த சிவசேனை சட்டப்பேரவை உறுப்பினர் அனில் பாபர் கடந்த சில நாள்களாக உடல்நிலைக்குறைவுக் காரணமாக சாங்லியில் உள்ள தனியார் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். 

இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அனில் பாபர் புதன்கிழமை காலை உயிரிழந்தார்.

அனில் பாபரின் திடீர் மறைவை அடுத்து மகாராஷ்டிரம் அமைச்சரவைக் கூட்டம் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளதாக  அறிவிக்கப்பட்டுள்ளது. 

அனில் பாபர் மறைவை அடுத்து அரசியல் கட்சி தலைவர்கள் பலரும்  இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

இந்த நிலையில், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே நேரில் அஞ்சலி செலுத்துவதற்காக சாங்லி செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

நீண்ட காலமாக சிவசேனையில் இருந்த வந்த அனில் பாபர், கட்சி பிளவுபட்டதையடுத்து, ஷிண்டே  அணிக்கு  சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com