ராகுல் மரியாதையுடன் பேச வேண்டும்: பாஜக
மக்களவையில் ராகுல் காந்தி பேசியது குறித்து முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக எம்.பி.யுமான ரவி சங்கர் பிரசாத் இன்று (ஜூலை 1) அதிருப்தி தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் பல்வேறு தலைவர்கள் உரையாற்றினர்.
இந்நிலையில், அவை முடிந்த பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய ரவி சங்கர் பிரசாத்,
''ராகுல் காந்தி முதல்முறை மக்களவை எதிர்க்கட்சித் தலைவராகியுள்ளார். அவர் மரியாதையுடன் பேச வேண்டும். ஆனால், அவையில் அவர் செய்தது என்ன? ஹிந்து மத நம்பிக்கையைப் பற்றி அவமரியாதையாகப் பேசுகிறார். அவையில் மற்ற மதங்களின் நம்பிக்கை குறித்து அவ்வாறு பேசுவாரா?'' எனக் கேள்வி எழுப்பினார்.
நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் ராகுல் காந்தி பங்கேற்று பேசினார்.
அவரின் உரையில் ஹிந்து மதத்தைப் பற்றி பேசியதாவது, தைரியத்தை பற்றி ஒரு மதம் மட்டும் பேசவில்லை. இஸ்லாம், கிறிஸ்துவம் உள்ளிட்ட அனைத்து மதங்களும் தைரியத்தைப் பற்றி பேசுகின்றன.
நமது நாட்டின் மாமனிதர்கள் அகிம்சை குறித்து பேசியிருக்கிறார்கள். ஆனால், ஹிந்துக்கள் என்று சொல்லிக் கொள்ளும் சிலர் வன்முறை, வெறுப்பு, பொய் உள்ளிட்டவை குறித்து மட்டுமே பேசி வருகிறார்கள். அவற்றை ஹிந்து மதம் பரப்பாது. நீங்கள் உண்மையான ஹிந்துக்கள் அல்லர் என ராகுல் காந்தி பேசியிருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.