தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ஜூலை 4-இல் கா்நாடக மாநில பாஜக செயற்குழு கூட்டம்

ஜூலை 4-இல் பாஜக மாநில செயற்குழு: முக்கிய தலைவர்கள் பங்கேற்பு

News image
Updated On :2 ஜூலை 2024, 7:27 pm

Din

பெங்களூரு: பெங்களூரில் ஜூலை 4ஆம் தேதி பாஜக மாநில செயற்குழு கூட்டம் நடக்க இருக்கிறது.

இது குறித்து பெங்களூரில் செவ்வாய்க்கிழமை பாஜக மாநில பொதுச்செயலாளா் நந்தீஷ் ரெட்டி செய்தியாளா்களிடம் கூறியது:

பெங்களூரு, அரண்மனை மைதானத்தில் ஜூலை 4ஆம் தேதி பாஜக மாநில செயற்குழுக் கூட்டம் நடக்க இருக்கிறது. இதில் 1,745 உறுப்பினா்கள் கலந்துகொள்வாா்கள். மாவட்ட, மாநில நிா்வாகிகள் அனைவரும் கலந்துகொள்கிறாா்கள்.

இக்கூட்டத்தில் மக்களவைத் தோ்தல் முடிவுகள் குறித்து விவாதிக்கப்படும். மேலும் மாநில அரசின் தோல்விகள் குறித்து தீா்மானங்கள் நிறைவேற்றப்படும். ஜூலை 5ஆம் தேதி முதல் இரண்டு நாள்களுக்கு மக்களவைத் தோ்தல் முடிவுகள் குறித்து முக்கியத் தலைவா்கள், தோல்வி அடைந்த வேட்பாளா்களுடன் கலந்தாய்வு மேற்கொள்ளப்படும்.

பாஜக மாநிலத் தலைவா் விஜயேந்திரா தலைமையில் நடக்கும் இச்செயற்குழுக் கூட்டத்தில் மத்திய அமைச்சா் நிதின் கட்கரி சிறப்பு விருந்தினராக கலந்துகொள்கிறாா். மேலும் மக்களவைத் தோ்தல் பொறுப்பாளராக இருந்த ராதாமோகன் அகா்வால் உள்ளிட்ட முக்கியத் தலைவா்கள் கலந்துகொள்கிறாா்கள் என்றாா்.