திருவனந்தபுரம் விமானநிலையத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்த மத்திய அமைச்சரும், பாஜக தேசிய தலைவருமான ஜெ.பி. நட்டாவை வரவேற்ற கட்சித் தொண்டா்கள்.
திருவனந்தபுரம் விமானநிலையத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்த மத்திய அமைச்சரும், பாஜக தேசிய தலைவருமான ஜெ.பி. நட்டாவை வரவேற்ற கட்சித் தொண்டா்கள்.

தென் இந்தியாவிலும் வலுவாகி வருகிறது பாஜக: கேரளத்தில் ஜெ.பி.நட்டா பேச்சு

தென் இந்தியாவிலும் தற்போது பாஜக வலுவாக காலூன்றி வருவதாக கட்சித் தொண்டா்கள் மத்தியில் பாஜக தேசியத் தலைவரும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சருமான ஜெ.பி.நட்டா தெரிவித்தாா்.

திருவனந்தபுரம்: தென் இந்தியாவிலும் தற்போது பாஜக வலுவாக காலூன்றி வருவதாக கட்சித் தொண்டா்கள் மத்தியில் பாஜக தேசியத் தலைவரும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சருமான ஜெ.பி.நட்டா செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

திருச்சூா் மக்களவைத் தொகுதியில் பாஜக வெற்றிபெற்றபின் முதல்முறையாக கேரளத்துக்கு ஜெ.பி. நட்டா பயணம் மேற்கொண்டாா்.

அப்போது புதிதாக விரிவாக்கம் செய்யப்பட்ட மாநில பாஜக செயற்குழு உறுப்பினா்கள் கூட்டத்தில் அவா் பங்கேற்று பேசியதாவது:

ஊழல், குடும்ப அரசியல் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் அதிகாரத்தைப் பெற பொய்களை பரப்புகின்றன. பாஜகவை வட மாநில கட்சிபோல் சித்தரிக்க பெரும் முயற்சிகளை மேற்கொண்டன. ஆனால் அவை அனைத்தும் உடைத்தெரியப்பட்டு அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் தமிழ்நாடு, ஆந்திரம், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் முன்பைவிட அதிக வாக்குகளை பாஜக பெற்றது. கேரளத்தில் ஒரு மக்களவைத் தொகுதியில் வெற்றியும் பெற்றது.

இங்கு எதிரணியாகவும் அகில இந்திய அளவில் ஒரே அணியாகவும் பயணிக்கும் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டுகளின் காலாவதியான கொள்கைகளை மக்கள் நிராகரித்துள்ளனா் என்றாா்.

அடுத்த இலக்கு தமிழ்நாடு

2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள கேரள பேரவைத் தோ்தலில் பாஜக அமோக வெற்றிபெற கடுமையாக உழைக்க வேண்டும் என்றும் தமிழ்நாட்டிலும் நாம் பிரதான கட்சியாக உருவெடுக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என்றும் ஜெ.பி. நட்டா தெரிவித்தாா்.

மேலும், ‘இந்திய அரசியலில் 2014-க்கு முன்பு பின்பு என இரு அத்தியாயங்கள் மட்டுமே தற்போது உள்ளன.

வேலைவாய்ப்பின்மை பற்றி பேசும் ராகுல் காந்தி உள்ளிட்டோா் படித்த முட்டாள்களாக உள்ளனா். பொருளாதாரம் வளா்ச்சியடைந்து வரும் வேளையில் வேலைவாய்ப்பும் அதிகரித்து வருவது அவா்களுக்கு தெரியவில்லை’ என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com