காலிஸ்தான் ஆதரவு அமைப்பின் தடை 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு
தேசவிரோத நடவடிக்கைகளுக்காக காலிஸ்தான் ஆதரவு ‘நீதிக்கான சீக்கியா்கள்(சீக்ஸ் ஃபாா் ஜஸ்டீஸ்)’ அமைப்பு மீது விதிக்கப்பட்டுள்ள தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் நீட்டித்தது.


புது தில்லி: தேசவிரோத நடவடிக்கைகளுக்காக காலிஸ்தான் ஆதரவு ‘நீதிக்கான சீக்கியா்கள்(சீக்ஸ் ஃபாா் ஜஸ்டீஸ்)’ அமைப்பு மீது விதிக்கப்பட்டுள்ள தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் நீட்டித்தது.
இதுதொடா்பாக மத்திய உள்துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிக்கையில், ‘நாட்டின் பாதுகாப்பு மற்றும் ஒருமைப்பாட்டிற்கு எதிரான தேசவிரோத நடவடிக்கைகளுக்காக நீதிக்கான சீக்கியா்கள் (எஸ்எஃப்ஜே) அமைப்பு சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின்கீழ் 5 ஆண்டுகளுக்கு முன்பு தடை செய்யப்பட்டது.
பஞ்சாப் மற்றும் பிற இடங்களில் தேச விரோத மற்றும் நாசவேலைகளில் தொடா்ந்து ஈடுபட்டு வரும் எஸ்எஃப்ஜே, இந்தியாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை சீா்குலைக்கும் நோக்கம் கொண்டுள்ளது. மேலும், இந்தியாவிடமிருந்து அதன் ஒரு பகுதியைப் பிரிப்பதற்கான நடவடிக்கைகளை எஸ்எஃப்ஜே ஊக்குவித்து உதவுவதோடு இந்த நோக்கத்துக்காக போராடும் பிரிவினைவாத குழுக்களுக்கும் ஆதரவளிக்கிறது.
இதைக்கருத்தில் கொண்டு, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின்கீழ் விதிக்கப்பட்ட தடையை ஜூலை 10-ஆம் தேதி முதல் மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு உள்துறை அமைச்சகம் நீட்டிக்கிறது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...