நிகழ் 2024-25 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை ஜூலை 23-ஆம் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
தில்லியில் நடைபெற்று வரும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன், பொருளாதார வல்லுநர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
மக்களவைத் தேர்தல் காரணமாக கடந்த பிப்ரவரி மாதம் இடைக்கால பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்திருந்தார். தற்போது மீண்டும் 3-வது முறையாக தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது.
இந்நிலையில், ஜூலை 22-ஆம் தேதி மழைக்கால கூட்டத்தொடருக்கு பதிலாக நிதி நிலைக் கூட்டத் தொடர் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 12 வரை நடைபெறும் கூட்டத்தில், ஜூலை 23-ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நிகழ் ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார்.
கூட்டத்தொடரின் முதல் நாள் ஜூலை 22 ஆம் பொருளாதார ஆய்வறிக்கையை நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறாா்.
இது நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் 7 -ஆவது நிதிநிலை அறிக்கையாகும். மறைந்த பிரதமா் மொராஜி தேசாய் நிதியமைச்சாரவும் இருந்து 6 முறை பட்ஜெட் தாக்கல் செய்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.