இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

தில்லி வந்தடைந்தார் பிரதமர் மோடி!

ரஷிய, ஆஸ்திரிய நாடுகளுக்கு மூன்று நாள்கள் பயணம் மேற்கொண்டிருந்தார்.

News image
பிரதமர் நரேந்திர மோடி
Updated On :11 ஜூலை 2024, 2:45 am

DIN

ரஷியா, ஆஸ்திரியா நாடுகளுக்கு மூன்று நாள்கள் பயணம் மேற்கொண்டிருந்த பிரதமர் நரேந்திர மோடி, வியாழக்கிழமை காலை தில்லி வந்தடைந்தார்.

ரஷிய தலைநகர் மாஸ்கோவுக்கு இருநாள்கள் பயணமாக திங்கள்கிழமை சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு அதிபர் புதின் வழங்கிய விருந்தில் பங்கேற்றார்.

தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை புலம்பெயர்ந்த இந்தியர்களுடன் கலந்துரையாடினார். அதன்பின், இந்தியா - ரஷியா இடையேயான 22-வது உச்சி மாநாட்டில் மோடியும், புதினும் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினர்.

அப்போது, இரு நாடுகளிடையே பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு, 9 ஒப்பந்தங்கள் கையொப்பமாகின.

முதலீடுகளை ஊக்குவிப்பது, வா்த்தகத்துக்கு அந்தந்த நாட்டு ரூபாய்களை பயன்படுத்துவது, எரிசக்தி முதல் வேளாண் துறைகள் வரையிலும் மற்றும் உள்கட்டமைப்புத் துறைகளிலும் ஒத்துழைப்பை மேம்படுத்துவதன் மூலம் வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் இந்தியா - ரஷியா இடையேயான வா்த்தகத்தை ரூ. 8,35,037 கோடியாக (100 பில்லியன் டாலா்) உயா்த்த ஒப்புக்கொள்ளப்பட்டது என்று இருநாடுகளின் கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ஆஸ்திரியாவுக்கு ஒருநாள் பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, உக்ரைன் போா், மேற்காசிய நிலவரம் உள்பட உலகளாவிய மோதல்கள் குறித்து ஆஸ்திரிய பிரதமா் காா்ல் நெகமருடன் புதன்கிழமை விரிவாக விவாதித்தாா்.

மேலும், வியன்னாவில் புதன்கிழமை நடைபெற்ற இந்திய-ஆஸ்திரிய நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்ற மோடி, இந்தியாவில் முதலீடு செய்ய அழைப்பு விடுத்தார்.

41 ஆண்டுகளுக்குப் பின் ஆஸ்திரியாவுக்கு சென்ற இந்தியப் பிரதமா் மோடி ஆவாா். இதற்கு முன் கடந்த 1983-ஆம் ஆண்டில் அப்போதைய பிரதமா் இந்திரா காந்தி ஆஸ்திரியப் பயணம் மேற்கொண்டிருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.