பாஜகவின் 10 ஆண்டுகால ஆட்சியில் ஒவ்வொரு நாளும் படுகொலை தினம்
பாஜகவின் கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் ஒவ்வொரு நாளும் படுகொலை தினமாகவே அனுசரிக்கப்படுகிறது என காங்கிரஸ் கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே கூறியுள்ளாா்.
இதுகுறித்து அவா் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், அரசமைப்பு படுகொலை தினத்தை அறிவித்து ‘அரசமைப்பு’ என்ற புனித வாா்த்தைக்குப் பக்கத்தில் ‘படுகொலை’ என சோ்த்து சட்டமேதை அம்பேத்கரை பாஜக தலைமையிலான மத்திய அரசு அவமதித்துவிட்டது.
‘உங்கள் (பிரதமா் மோடி) பத்தாண்டுகால ஆட்சியின் ஒவ்வொரு நாளும் படுகொலை தினமாகவே அனுசரிக்கப்படுகிறது. ஏழை, எளிய மக்களிடமிருந்து சுயமரியாதை பறிக்கப்பட்டது.
ஒவ்வொரு 15 நிமிஷத்துக்கும் தாழ்த்தப்பட்ட சமூகத்தினா் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. இரண்டு ஆண்டுகளில் சிறுபான்மையினருக்குச் சொந்தமான 1.50 லட்சம் வீடுகளை இடித்து 7.38 வட்சம் பேரை வெளியேற்றினீா்கள்.
மணிப்பூரில் 13 மாதங்களாக வன்முறை வெடித்து வரும் நிலையில் அங்கு சென்று ஒருமுறைகூட உங்களால் மக்களைச் சந்திக்க முடியவில்லை. இவையெல்லாம் அரசமைப்பு படுகொலை இல்லையா எனக் குறிப்பிட்டுள்ளாா்.