மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மத்திய கல்வித் துறை அமைச்சரை சந்தித்த நீட் மாணவர்கள்: என்ன பேசினார்கள்?

மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை நீட் மாணவர்கள் சந்தித்துப் பேசியுள்ளனர்.

News image
நீட் விவகாரம் - கோப்புப்படம்
Updated On :12 ஜூலை 2024, 2:40 am

DIN

இளநிலை மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வு எழுதியிருக்கும் மாணவர்கள், மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை சந்தித்துப் பேசினர்.

நீட் தேர்வு தொடர்பாக எழுந்திருக்கும் பிரச்னைகள் தொடர்பாக, நீட் மாணவர்கள் குழு ஒன்று நேற்று புது தில்லியில் உள்ள தர்மேந்திர பிரதான் இல்லத்துக்குச் சென்று மத்திய அமைச்சரை சந்தித்து, தங்களது கவலைகளைத் தெரிவித்துள்ளது.

நீட் தேர்வு எழுதியிருக்கும் தாங்கள் சந்திக்கும் பிரச்னைகளை மத்திய அமைச்சரிடம் எடுத்துச் சொல்லியிருக்கும் மாணவர்கள், சில விவகாரங்கள் குறித்து மத்திய அமைச்சரிடமிருந்து விளக்கத்தைக் கேட்டுப் பெற்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாணவர்களின் பிரச்னைகளைக் கேட்ட மத்திய அமைச்சர், இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார். மாணவர்களின் எதிர்காலத்தை உறுதி செய்யும் வகையில், தேர்வுகள் முறையாக நடப்பதை மத்திய அரசு உறுதி செய்யும் என்றும் மத்திய அமைச்சர் உறுதி அளித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக, நீட் தேர்வை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தபோது, தேசிய தேர்வு முகமை தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தின் மீது, மனுதாரர்கள் பதிலளிக்க கால அவகாசம் கொடுத்து, வழக்கு விசாரணையை ஜூலை 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்திருந்தது.

தேசிய தேர்வு முகமை தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், நீட் வினாத்தாள்கள் எங்கும் கசிந்ததாக ஆதாரம் இல்லை, ஒவ்வொரு வினாத்தாளும், ஒரு மாணவரின் பதிவு எண்ணுடன் பிரிண்ட் செய்யப்படுகிறது. எங்கும் பாதுகாப்பில் குறைபாடு ஏற்படவில்லை. தேசிய தேர்வு முகமை பார்வையாளர்களும் எந்தப் புகாரும் கொடுக்கவில்லை. அனைத்து தேர்வு மையங்களும் சிசிடிவி கேமராக்கள் மூல கண்காணிக்கப்பட்டு வந்துள்ளது என்று தெரிவித்திருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.