பத்ரிநாத்திலும் தோற்றது பாரதிய ஜனதா!

மக்களவைத் தேர்தலில் அயோத்தியில் தோல்வியடைந்தது போல, பத்ரிநாத்திலும் தோற்றது பாரதிய ஜனதா!
பத்ரிநாத் கோயில்
பத்ரிநாத் கோயில்
Published on
Updated on
1 min read

மக்களவைத் தேர்தலில் அயோத்தி தொகுதியில் தோல்வியடைந்த நிலையில், பத்ரிநாத் பேரவைக்கு நடந்த இடைத்தேர்தலிலும் தோற்றிருக்கிறது பாரதிய ஜனதா கட்சி.

உத்தரகண்ட் மாநிலத்தின் ஆளும் பாஜக, அங்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் தோல்வியைத் தழுவியிருப்பது பேசுபொருளாகியிருக்கிறது.

பத்ரிநாத் சட்டப்பேரவைத் தொகுதிக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டுள்ளன. சனிக்கிழமை பிற்பகல் 2.50 மணி நிலவரப்படி, காங்கிரஸ் வேட்பாளர் லக்பத் சிங் புடோலா, 5224 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். அதாவது புடோலா 28,161 வாக்குகளும், பாஜக வேட்பாளர் ராஜேந்திர பண்டாரி 22,937 வாக்குகளும் பெற்றிருந்தனர்.

உத்தரகண்ட் மாநிலம் பத்ரிநாத் தொகுதியில் காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த ராஜேந்திர பண்டாரி, தனது பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, ஆளும் பாஜகவில் இணைந்தாா். இதனால், இந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்ற நிலையில், பாஜக வேட்பாளராக களமிறக்கப்பட்ட ராஜேந்திர பண்டாரி பின்னடைவை சந்தித்துள்ளார்.

இதன் மூலம், பத்ரிநாத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவரது வெற்றியை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

ஜூலை 10ஆம் தேதி நாடு முழுவதும் 13 சட்டப்பேரவைகளுக்கு நடந்த இடைத்தேர்தலில், விக்கிரவாண்டி தொகுதியில் திமுக வெற்றி பெற்றுள்ளது.

ஹிமாச்சலில் டேஹ்ரா, நலகார், தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். பஞ்சாப் மாநிலம் மேற்கு ஜலந்தர் தொகுதியில் ஆம் ஆத்மி கட்சியும், மேற்கு வங்க மாநிலத்தில் இடைத்தேர்தல் நடைபெற்ற ராய்கஞ்ச், ரானாகாட் தக்ஷிண், பக்டா தொகுதிகளில் திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர்களும் வெற்றி பெற்றுள்ளனர். மணிக்டலா தொகுதியில் திரிணமூல் வேட்பாளர் முன்னிலையில் உள்ளார்.

உத்தரக்கண்ட் மாநிலம் பத்ரிநாத் மற்றும் மாங்களூர், தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்களின் வெற்றி இன்னமும் அறிவிக்கப்படவில்லை.

தமிழகத்தின் விக்கிரவாண்டி உள்பட 7 மாநிலங்களில் உள்ள 13 பேரவைத் தொகுதிகளில் புதன்கிழமை வாக்குப்பதிவு நடைபெற்றது.

மேற்கு வங்கத்தில் ராய்கஞ்ச், ரனாகாட் தக்ஷிண், பக்டா, மாணிக்தலா, ஹிமாசல பிரதேசத்தில் தெஹ்ரா, ஹமீா்பூா், நலகாா், உத்தரகண்டில் பத்ரிநாத் மற்றும் மாங்ளூா், பஞ்சாபில் ஜலந்தா் மேற்கு, மத்திய பிரதேசத்தில் அமா்வாரா (தனி), பிகாரின் ரூபாலி ஆகிய தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com