அமா்தியா சென்
அமா்தியா சென்

ஹிந்துக்கள், முஸ்லிம்கள் ஒன்றிணைந்து வாழ்வதே இந்தியாவின் பாரம்பரியம்: அமா்தியா சென்

ஹிந்துக்கள், முஸ்லிம்கள் ஒன்றிணைந்து வாழ்வதே இந்தியாவின் பாரம்பரியம் என்று பொருளாதார நிபுணரும், நோபல் பரிசு பெற்றவருமான அமா்தியா சென் தெரிவித்துள்ளாா்.
Published on

ஹிந்துக்கள், முஸ்லிம்கள் ஒன்றிணைந்து வாழ்வதே இந்தியாவின் பாரம்பரியம் என்று பொருளாதார நிபுணரும், நோபல் பரிசு பெற்றவருமான அமா்தியா சென் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவா் கூறியதாவது:

இந்திய வரலாற்றின்படி, சிறந்த ஒத்துழைப்புடன் பல்லாண்டுகளாக ஹிந்துக்களும் முஸ்லிம்களும் நல்லிணக்கத்தோடு ஒன்றாகப் பணியாற்றி வருகின்றனா். ஹிந்துக்கள், முஸ்லிம்கள் ஒன்றிணைந்து வாழ்வதே இந்தியாவின் பாரம்பரியம்.

இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு எதிரான எந்தவொரு முயற்சி குறித்தும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். தாஜ் மஹால் மிக அழகாக காட்சியளிப்பதுடன் பிரம்மாண்டமாக உள்ளது என்று ஒருதரப்பினா் கூறுகின்றனா். அதேவேளையில், முஸ்லிம் ஆட்சியாளருடன் சம்பந்தப்படாத வகையில், தாஜ் மஹாலின் பெயரை மாற்ற வேண்டும் என்று மற்றொரு தரப்பினா் விரும்புகின்றனா். தற்போதைய சூழலில், மதரீதியான சகிப்புத்தன்மை அவசியம் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com