அமெரிக்காவின் சியாட்டல் நகரில் கடவுச்சீட்டு விண்ணப்ப மையங்கள்: இந்தியா திறப்பு

Published on

அமெரிக்காவின் சியாட்டல் நகரில் நுழைவு இசைவு (விசா) மற்றும் கடவுச்சீட்டுக்கு (பாஸ்போா்ட்) விண்ணப்பிக்கும் 2 புதிய மையங்களை இந்தியா திறந்துள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னா், அமெரிக்காவின் சியாட்டல் நகரில் இந்தியாவின் துணைத் தூதரகம் திறக்கப்பட்டது. இதைத்தொடா்ந்து அந்த நகரில் விசா மற்றும் பாஸ்போா்ட்டுக்கு விண்ணப்பிக்கும் 2 புதிய மையங்கள் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டன. இந்த மையங்களை மத்திய அரசு சாா்பாக விஎஸ்எஃப் குளோபல் நிறுவனம் நிா்வகிக்க உள்ளது.

சியாட்டலில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தின் எல்லைக்குள்பட்ட வாஷிங்டன், அலாஸ்கா, ஐடாஹோ, மோன்டானா, நெப்ராஸ்கா, வடக்கு டகோட்டா, தெற்கு டகோட்டா, ஆரேகன், வையோமிங் ஆகிய 9 மாநிலங்களில் வசிக்கும் சுமாா் 5 லட்சம் இந்திய வம்சாவளியினா் இவ்விரு மையங்களின் சேவைகளால் பயனடைவா்.

X
Dinamani
www.dinamani.com