மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

சவுக்கு சங்கர் வழக்கில் தமிழக அரசு பதில்தர உச்சநீதிமன்றம் உத்தரவு

சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்ததை எதிர்த்த வழக்கில் தமிழக அரசு பதில்தர உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News image
சவுக்கு சங்கர்.
Updated On :15 ஜூலை 2024, 9:20 am

DIN

இதுதொடர்பாக சவுக்கு சங்கரின் தாயார் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சவுக்கு சங்கர் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் கொடுக்கும் வகையிலா நடந்து கொண்டார். சவுக்கு சங்கரின் நடத்தை மன்னிக்க முடியாதது.

ஆனால் அவருக்கு ஏன் இடைக்கால பாதுகாப்பு தரக்கூடாது? என உச்சநீதிமன்றம் வினவியது.

சவுக்கு சங்கரை விடுவித்தால் பொது ஒழுங்கு கெடும். சவுக்கு சங்கர் மீது 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என தமிழக அரசுத் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.

இதையடுத்து இவ்வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட உச்சநீதிமன்றம் வழக்கின் விசாரணையை ஜூலை 18ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.

மகளிா் காவல் துறையினரை அவதூறாக பேசியதாகக் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கா் மீது அடுத்தடுத்து 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், மே 12-ஆம் தேதி குண்டா் சட்டத்தில் அவரை சிறையில் அடைக்க சென்னை மாநகர காவல் துறை ஆணையா் உத்தரவு பிறப்பித்தாா்.

இதை எதிா்த்து சவுக்கு சங்கரின் தாய் கமலா தொடா்ந்த ஆட்கொணா்வு மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் அமா்வு மாறுபட்ட தீா்ப்பை வழங்கியது.

அதில், நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதன், குண்டா் சட்டத்தை ரத்து செய்ய முகாந்திரம் இருப்பதால் அதை ரத்து செய்வதாகவும், நீதிபதி பாலாஜி, அரசு தரப்பு பதில் அளிக்க அவகாசம் அளிக்க வேண்டும் என மாறுபட்ட தீா்ப்புகளை வழங்கினா்.

இதையடுத்து, இந்த வழக்கை மூன்றாவது நீதிபதி விசாரணைக்காக பொறுப்பு தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்து உத்தரவிட்டனா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.