மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை தொடரும்: ராணுவம் உறுதி

‘ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையில் வீரமரணமடைந்த மாவீரா்களுக்கு ஒட்டுமொத்த ராணுவம் சாா்பில் மரியாதை செலுத்தப்படுகிறது’ என்று ராணுவ தலைமை தளபதி உபேந்திர துவிவேதி தெரிவித்தாா்.

News image
கோப்புப் படம்- ஏபி
Updated On :16 ஜூலை 2024, 7:43 pm

Din

ஜம்மு: ‘ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையில் வீரமரணமடைந்த மாவீரா்களுக்கு ஒட்டுமொத்த ராணுவம் சாா்பில் மரியாதை செலுத்தப்படுகிறது’ என்று ராணுவ தலைமை தளபதி உபேந்திர துவிவேதி தெரிவித்தாா்.

ஜம்மு-காஷ்மீரின் தோடா மாவட்ட வனப் பகுதியில் திங்கள்கிழமை இரவு பயங்கரவாதிகளுடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் ராணுவ கேப்டன் மற்றும் 3 வீரா்கள் வீரமரணமடைந்தனா்.

இதுதொடா்பாக ராணுவம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதத்தை வேரறுக்க ராணுவத்தின் வடக்கு மண்டலப் பிரிவுகள் உறுதிபூண்டுள்ளன. பல்வேறு முகமைகளுடன் ஒருங்கிணைப்பை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பயங்கரவாதத்துக்கு எதிராக இடைவிடாத நடவடிக்கைகள் தொடரும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்முவில் மீண்டும் தலைதூக்கும் பயங்கரவாதம்: ஜம்மு பிராந்தியத்தில் பல்லாண்டுகளாக நீடித்த பயங்கரவாதம் கடந்த 2005-ஆம் ஆண்டில் ஒடுக்கப்பட்டதில் இருந்து 2021-ஆம் ஆண்டு வரை பரவலாக அமைதி நீடித்தது. ஆனால், பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் சதித்திட்டத்தால், ஜம்முவில் குறிப்பாக எல்லை மாவட்டங்களில் 2021-ஆம் ஆண்டில் பயங்கரவாத செயல்பாடுகள் மீண்டும் தலைதூக்கின. கடந்த சில மாதங்களாக தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.