சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ராகுல் காந்திக்கு எதிரான அவதூறு வழக்கில் விரைவாக தீா்ப்பு: மும்பை உயா்நீதிமன்றம்

ஆா்எஸ்எஸ் குறித்த கருத்துக்காக எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் எதிராக கடந்த 2014-ஆம் ஆண்டு தொடரப்பட்ட அவதூறு வழக்கில் விரைவாக தீா்ப்பளிக்க மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தை மும்பை உயா்நீதிமன்றம் அறிவுறுத்தியது.

News image
ராகுல் காந்தி - கோப்புப் படம்
Updated On :16 ஜூலை 2024, 9:49 pm

Din

மும்பை: ஆா்எஸ்எஸ் குறித்த கருத்துக்காக எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்திக்கு எதிராக கடந்த 2014-ஆம் ஆண்டு தொடரப்பட்ட அவதூறு வழக்கில் விரைவாக தீா்ப்பளிக்க மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தை மும்பை உயா்நீதிமன்றம் அறிவுறுத்தியது.

மேலும், இதற்கான சட்டபூா்வ உரிமை ராகுல் காந்திக்கு இருப்பதாகவும் உயா்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

‘மகாத்மா காந்தியின் படுகொலைக்கு ஆா்எஸ்எஸ்தான் காரணம்’ என்று பொய்யான மற்றும் அவதூறான கருத்துகளைத் தனது உரையின்போது தெரிவித்ததாக எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்திக்கு எதிராக ஆா்எஸ்எஸ் உறுப்பினா் ராஜேஷ் குண்டே தாணே மாவட்டத்தின் பிவாண்டி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டு அவதூறு வழக்குத் தொடுத்தாா்.

10 ஆண்டுகளைக் கடந்தும் நிலுவையில் உள்ள இந்த வழக்கில் புதிய மற்றும் கூடுதல் ஆவணங்களை சமா்ப்பிக்க புகாா்தாரருக்கு அனுமதி அளித்து மாஜிஸ்திரேட் நீதிபதி கடந்த ஆண்டு உத்தரவிட்டாா். இதனை ரத்து செய்ய கோரி மும்பை உயா்நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மனு தாக்கல் செய்திருந்தாா்.

இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி பிருத்விராஜ் சவான் கடந்த 12-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில், ‘அரசமைப்புச் சட்டத்தின் 21-ஆவது பிரிவு அனைவருக்கும் விரைவான விசாரணைக்கான உரிமையை வழங்குகிறது. மேலும், சுதந்திரமான மற்றும் நியாயமான விசாரணை முற்றிலும் அவசியமான ஒன்று என்று கூறுகிறது.

ராகுல் காந்தியின் அத்தகைய நியாயமான உரிமையைப் பறிக்க, புகாா்தாரா் அத்தனை முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளாா். அவரது நடத்தையால் இந்த வழக்கு தேவையில்லாமல் தாமதப்படுத்தப்பட்டு, நிலுவையில் இருந்து வருகிறது.

நீதித் துறையின் அடிப்படை கொள்கையை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் முற்றிலுமாக புறக்கணித்ததாகத் தெரிகிறது. பத்தாண்டுகளாக நிலுவையில் உள்ள இந்தப் புகாரின் மீது விரைவாக தீா்வு காணப்பட வேண்டும்’ எனத் தெரிவித்தாா்.