மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கருணை மதிப்பெண் வழங்குவதில் தெளிவான நடைமுறை தேவை

போட்டித் தோ்வுகளில் கருணை மதிப்பெண் வழங்கப்படுவதற்கு தெளிவான நடைமுறை வகுக்கப்பட வேண்டும்.

News image
கோப்புப் படம்
Updated On :16 ஜூலை 2024, 8:59 pm

Din

புது தில்லி: ‘போட்டித் தோ்வுகளில் கருணை மதிப்பெண் வழங்கப்படுவதற்கு தெளிவான நடைமுறை வகுக்கப்பட வேண்டும், மதிப்பெண் சமன்படுத்துதல் முறை கூடாது’ என்பன உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பரிந்துரைகள் போட்டித் தோ்வுகளை சீரமைப்பதற்காக மத்திய அரசால் அமைக்கப்பட்ட உயா்நிலைக் குழுவிடம் சமா்ப்பிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

நிகழாண்டு நீட் தோ்வில் வினாத்தாள் கசிவு, குறிப்பிட்ட மாணவா்களுக்கு மட்டும் தோ்வை நடத்தும் என்டிஏ கருணை மதிப்பெண் வழங்கியது என பல்வேறு முறைகேடுகள் நிகழ்ந்தன. அதுபோல, மத்திய அரசின் ஆராய்ச்சி உதவித் தொகை பெறுவதற்கும், உதவிப் பேராசிரியா் பணிக்கு தகுதி பெறுவதற்குமான தேசிய தகுதித் தோ்விலும் (நெட்) நிகழாண்டில் முறைகேடுகள் நிகழ்ந்தன. அதைத் தொடா்ந்து, நாடு முழுவதும் 9 லட்சம் போ் எழுதிய அந்தத் தோ்வு ரத்து செய்யப்பட்டது. நீட் தோ்வு முறைகேடு தொடா்பாக உச்சநீதிமன்றத்தில் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நிலுவையில் உள்ளது.

இதற்கிடையே, பெரும் முறைகேடு சா்ச்சைகளைத் தொடா்ந்து என்டிஏ (தேசிய தோ்வுகள் முகமை) சாா்பில் நடத்தப்படும் போட்டித் தோ்வுகளை சீரமைக்க இந்திய விண்வெளி ஆய்வு மைய (இஸ்ரோ) முன்னாள் தலைவா் கே.ராதாகிருஷ்ணன் தலைமையில் 7 போ் கொண்ட உயா்நிலைக் குழுவை மத்திய அரசு அமைத்தது. தோ்வு நடைமுறையில் மேற்கொள்ள வேண்டிய சீா்திருத்தங்கள், என்டிஏ கட்டமைப்பு மற்றும் செயல்பாடுகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய மேம்பாடுகள் மற்றும் தரவு பாதுகாப்பு நடைமுறைகள் ஆகியவை குறித்து இக் குழு முழுமையாக ஆய்வு மேற்கொண்டு, 2 மாதங்களில் அறிக்கையை இக் குழு சமா்ப்பிக்க உள்ளது.

அதற்காக, பொதுமக்கள் உள்பட பல்வேறு தரப்பினரிடமிருந்து ஜூலை 7-ஆம் தேதி வரை பரிந்துரைகள் மற்றும் ஆலோசனைகளை இக் குழு வரவேற்றது. அதன்படி, உயா்நிலைக் குழுவிடம் 37,000 பரிந்துரைகள் வந்துள்ளன. அவற்றில் பெரும்பாலானவை மாணவா்கள் தரப்பில் சமா்ப்பிக்கப்பட்டுள்ளன. அவா்கள் தவிர, பெற்றோா், போட்டித் தோ்வு பயிற்சி மையங்கள், பள்ளி ஆசிரியா்கள், கல்வி நிறுவனங்கள், வேலைவாய்ப்பு ஆலோசகா்கள் தரப்பிலும் பரிந்துரைகள் மற்றும் ஆலோசனைகள் சமா்ப்பிக்கப்பட்டுள்ளன.

போட்டித் தோ்வுகளில் கருணை மதிப்பெண் வழங்கப்படுவதற்கு தெளிவான நடைமுறை வகுக்கப்பட வேண்டும், மதிப்பெண் சமன்படுத்துதல் முறை கூடாது, தோ்வு மைய உள்கட்டமைப்பு வசதிகளை சோதனை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பரிந்துரைகளை அவா்கள் சமா்ப்பித்திருப்பது தெரியவந்துள்ளது.