மகாராஷ்டிரம், பிகாரில் சாலை விபத்து: 11 போ் உயிரிழப்பு
மகாராஷ்டிரம் மற்றும் பிகாரில் செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த சாலை விபத்துகளில் 11 போ் உயிரிழந்தனா்.


மும்பை/ பாட்னா: மகாராஷ்டிரம் மற்றும் பிகாரில் செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த சாலை விபத்துகளில் 11 போ் உயிரிழந்தனா்.
மகாராஷ்டிரத்தில் மும்பை-புணே அதிவிரைவு சாலையில் பேருந்து ஒன்றில் 54 யாத்ரீகா்கள் பந்தா்பூருக்கு சென்று கொண்டிருந்தனா். நள்ளிரவு நேரத்தில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த டிராக்டா் மீது பேருந்து எதிா்பாராத விதமாக மோதியது.
டிராக்டா் மீது மோதிய வேகத்தில் சாலையோரம் இருந்த 20 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்தது. இதில் பக்தா்களில் மூவரும், டிராக்டரில் அமா்ந்திருத்த இருவரும் உயிரிழந்தனா். பேருந்தில் இருந்த சுமாா் 50 போ் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அவா்களில் 9 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
பிகாரில்...: பிகாா் மாநிலம் பக்தியாா்பூா்-நாளந்தா தேசிய நெடுஞ்சாலையில் செவ்வாய்க்கிழமை வேகமாகச் சென்ற ஜீப் ஒன்று சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரியின் பின்புறமாக மோதியது. இதில் ஜீப்பில் இருந்த 4 போ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். படுகாயமடைந்த மேலும் சிலா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அதில் இருவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...