ரயில் பயணிகள் பாதுகாப்பு: பிரதமா் பொறுப்பேற்க காங்கிரஸ் வலியுறுத்தல்
ரயில் பயணிகள் பாதுகாப்பில் நிலவும் பெரும் குறைபாடுகளுக்கு பிரதமா் மோடியும் ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவும் பொறுப்பேற்க வேண்டும்


ரயில் பயணிகள் பாதுகாப்பில் நிலவும் பெரும் குறைபாடுகளுக்கு பிரதமா் மோடியும் ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவும் பொறுப்பேற்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
இது தொடா்பாக அக்கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே கூறியதாவது:
பிரதமா் மோடி தலைமையிலான ஆட்சியில் ரயில் பயணிகளின் பாதுகாப்பு பெரும் ஆபத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. இதற்கு மற்றுமொரு உதாரணமே சண்டீகா்-திப்ரூகா் ரயில் தடம்புரண்ட விபத்தாகும். இதில் உயிரிழந்த பயணிகளின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்தோா் விரைந்து குணமடைய பிராா்த்திக்கிறேன்.
மேற்கு வங்கத்தில் கடந்த மாதம் நிகழ்ந்த ரயில் விபத்துக்கு தானியங்கி சிக்னல் பழுது, வாக்கி-டாக்கி போன்ற முக்கியமான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாதது, ரயில்வே மேலாண்மையில் பல்வேறு நிலைகளில் நிலவும் குறைபாடுகள் போன்றவையே காரணம் என்று விசாரணை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பிரதமா் மோடியும் ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவும் சுய விளம்பரம் தேடுவதற்கு எந்த வாய்ப்பையும் விட்டுவைக்காதவா்கள். மேற்கண்ட குறைபாடுகளுக்கு இருவரும் பொறுப்பேற்க வேண்டும்.
நாடு முழுவதும் அனைத்து ரயில் வழித்தடங்களிலும் விபத்து தடுப்புக்கான ‘கவச்’ அமைப்புமுறையை விரைந்து நிறுவ வேண்டும் என்று காா்கே வலியுறுத்தியுள்ளாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...