மின் கட்டணக் கணக்கீட்டுப் பணிகளை தனியாரிடம் ஒப்படைக்கக் கூடாது: சிபிஐ வலியுறுத்தல்!நான் முடி வெட்டிக்கொண்டால்கூட பிரச்னையா? - மேயர் பிரியா ஆதங்கம்!ஸ்குவாஷ் விளையாட்டில் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த வீரர்களுக்கு ரூ. 60 லட்சம்! முதல்வர் அறிவிப்புஇன்று காஞ்சி காமாட்சியம்மன் கோயில் நடை அடைப்பு! பக்தர்கள் ஏமாற்றம்இன்ஸ்டாவில் தங்க, பணமழையை கொட்டிய பெண்! தட்டித் தூக்கிய திருடர்கள்!!வேலை நிறுத்தம் எதிரொலி! நாளை வழக்கம் போல வங்கிகள் செயல்படும்!நேபாளப் பெருவெள்ளம்: 85 தமிழர்களின் நிலை என்னவானது?மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது!நுங்கம்பாக்கம் சாலைக்கு இயக்குநர் பாக்யராஜ் பெயர்

மெட்ரோ ரயில் நிலையத்தில் பெண் தற்கொலை? போலீஸார் விசாரணை

உயிரிழந்தவர் குறித்து அடையாளம் தெரியாததால் போலீஸார் விசாரணை

கோப்புப் படம்

Published On :

தில்லி மெட்ரோ ரயில் நிலையத்தில் பெண் ஒருவர் பலியான சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு தில்லியின் உத்தம் நகரில் உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தில், சுமார் 40 வயதுடைய பெண் ஒருவர் நடைமேடையில் இருந்து, ரயில் பாதையின் மேல் குதித்துள்ளார். அவரை மருத்துவமனையில் உடனடியாக அனுமதித்த போதும், அவர் இறந்து விட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்பான வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், உயிரிழந்த பெண்ணிடம் அடையாளம் காணும் விதமாக எந்த பொருளும் இல்லாத காரணத்தினால், அந்த பெண்ணை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், உயிரிழந்த பெண் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது விபத்தில் உயிரிழந்தாரா? என்பதையும் விசாரித்து வருகின்றனர்.

மெட்ரோ ரயில் நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், அந்த பெண்ணின் விவரங்களை சேகரிக்க முயன்று வருவதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.