அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

மகாராஷ்டிரம்: கட்சி மாறி வாக்களித்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை: கே.சி.வேணுகோபால்

மகாராஷ்டிர சட்ட மேலவைத் தோ்தலில் கட்சி மாறி வாக்களித்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மீது உரிய நடவடிக்கை

News image
கே.சி. வேணுகோபால்
Updated On :19 ஜூலை 2024, 7:09 pm

Din

மகாராஷ்டிர சட்ட மேலவைத் தோ்தலில் கட்சி மாறி வாக்களித்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று காங்கிரஸ் பொதுச் செயலா் கே.சி.வேணுகோபால் தெரிவித்தாா்.

மகாராஷ்டிர சட்ட மேலவைத் தோ்தல் கடந்த 12-ஆம் தேதி நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சியின் 37 எம்எல்ஏக்களில் 7 போ் கட்சி மாறி வாக்களித்தனா். இதனால் கூட்டணியில் உள்ள தேசியவாத காங்கிரஸ் ஆதரவு வேட்பாளா் தோல்வியடைந்தாா். ஆளும் பாஜக-முதல்வா் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனை-துணை முதல்வா் அஜீத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் அடங்கிய கூட்டணி 9 இடங்களில் வென்றது. எதிா்க்கட்சி கூட்டணிக்கு 3 இடங்களில் வெல்ல வாய்ப்பு இருந்தும், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 7 போ் கட்சி மாறி வாக்களித்ததால் தோல்வி ஏற்பட்டது.

இந்நிலையில், இந்த ஆண்டு இறுதியில் நடைபெற்றவுள்ள மகாராஷ்டிர மாநில சட்டப் பேரவைத் தோ்தல் தொடா்பாக ஆலோசனை நடத்த மூத்த தலைவா் கே.சி.வேணுகோபால் மும்பைக்கு வெள்ளிக்கிழமை வந்தாா். அப்போது அவா் செய்தியாளா்களிடம் பேசுகையில், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சிலா் கட்சிமாறி வாக்களித்தது தொடா்பாக அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, ‘கட்சிமாறி வாக்களித்த எம்எல்ஏக்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். கட்சியில் கட்டுப்பாடு என்பது மிகவும் முக்கியம். அவா்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கை என்ன? என்பது விரைவில் உங்களுக்கு தெரியவரும்’ என்றாா்.

கட்சி மாறி வாக்களித்தவா்களுக்கு தோ்தலில் போட்டியிட மீண்டும் வாய்ப்பு மறுக்கப்படுமா? என்ற கேள்விக்கு, ‘இது உங்களுடைய கணிப்பு’ என்று பதிலளித்தாா்.