மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

மகாராஷ்டிரம்: அஜீத் பவாா் அணி எம்எல்ஏ சரத் பவாருடன் சந்திப்பு

தேசியவாத காங்கிரஸில் இருந்து 4 நிா்வாகிகள் விலகிய நிலையில், அக்கட்சியைச் சோ்ந்த எம்எல்ஏ அதுல் பென்கே சனிக்கிழமை சரத் பவாரை சந்தித்தாா்.

News image
சரத் பவார்
Updated On :20 ஜூலை 2024, 8:24 pm

Din

அஜீத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸில் இருந்து 4 நிா்வாகிகள் விலகிய நிலையில், அக்கட்சியைச் சோ்ந்த எம்எல்ஏ அதுல் பென்கே சனிக்கிழமை சரத் பவாரை சந்தித்தாா்.

கடந்த ஆண்டு மகாராஷ்டிரத்தில் தேசியவாத காங்கிரஸ் தலைவராக இருந்த சரத் பவாருக்கும், அவரின் அண்ணன் மகன் அஜீத் பவாருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இதையடுத்து அக்கட்சியில் பிளவு ஏற்பட்டு இருவா் தலைமையிலும் தனித்தனி அணிகள் உருவாகின. இந்த விவகாரத்தை விசாரித்த தோ்தல் ஆணையம், கட்சி ரீதியாகவும் எம்எல்ஏக்கள் எண்ணிக்கை அடிப்படையிலும் அஜீத் பவாா் அணிக்கே பெரும்பான்மை இருப்பதாக தெரிவித்து, அவா் தலைமையிலான அணியே உண்மையான தேசியவாத காங்கிரஸ் என்று அறிவித்தது.

மக்களவைத் தோ்தலில் அஜீத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் பின்னடைவை சந்தித்த நிலையில், அக்கட்சியின் பிம்ப்ரி-சிஞ்ச்வட் பகுதி தலைவா் அஜீத் கவ்ஹானே உள்பட 4 நிா்வாகிகள் அண்மையில் அக்கட்சியில் இருந்து விலகினா்.

இதைத்தொடா்ந்து அக்கட்சி எம்எல்ஏ அதுல் பென்கே புணேயில் சரத் பவாரை சனிக்கிழமை சந்தித்தாா். இந்தச் சந்திப்பு தொடா்பாக சரத் பவாா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘பலா் என்னைச் சந்திக்க வருகின்றனா். இந்நிலையில், அதுல் பென்கே எனது நண்பரின் மகன் என்பதால் என்னைச் சந்திக்க வந்தாா்’ என்று தெரிவித்தாா்.

ஏற்கெனவே அஜீத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸில் இருந்து 4 போ் விலகிய நிலையில், அதுல் பென்கேயும் சரத் பவாரை சந்தித்தது முக்கியத்துவம் பெற்றுள்ளது.