உமர் காலித்தின் ஜாமீன் மனுவை விசாரிப்பதிலிருந்து உயர் நீதிமன்ற நீதிபதி விலகல்!

உமர் காலித் காலித் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை விசாரிப்பதிலிருந்து விலகினார் தில்லி உயர் நீதிமன்ற நீதிபதி அமித் சர்மா.
உமர் காலித்
உமர் காலித்
Published on
Updated on
1 min read

தில்லி கலவரத்தில் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் உள்ள முன்னாள் ஜேஎன்யு மாணவன் உமர் காலித் காலித் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை விசாரிப்பதிலிருந்து தில்லி உயர் நீதிமன்ற நீதிபதி அமித் சர்மா திங்கள்கிழமை விலகினார்.

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் பிரதிபா எம். சிங், நீதிபதி சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. உமர் காலித் வழக்கிலிருந்து நீதிபதி அமித் சர்மா விலகியதையடுத்து, மற்றொரு அமர்வு முன் வழக்கைக் கொண்டு செல்ல வேண்டும் என்றும், நீதிபதி அமித் சர்மா உறுப்பினராக இல்லாத மற்றொரு பெஞ்ச் முன்பு ஜூலை 24-ம் தேதி பட்டியலிடுங்கள் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

உமர் காலித்
நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது!

முன்னதாக வடகிழக்கு தில்லியில் 2020-ம் ஆண்டு பிப்ரவரியில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவத்தில் முக்கிய மூலையாகச் செயல்பட்டதாக இந்தியத் தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் மற்றும் சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் பிரிவுகள் மற்றும் சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் உமர் காலித்திற்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

காலித்தின் ஜாமீன் மனுவை ஏற்கனவே நிராகரித்த நிலையில், கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக சிறையிலிருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com