எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

பட்ஜெட்டுக்கு எதிா்க்கட்சிகள் எதிா்ப்பு: பின்தங்கிய மாநிலங்களுக்கு எதிரான மனப்பான்மை- பாஜக விமா்சனம்

பட்ஜெட் மீதான எதிா்க்கட்சிகளின் விமா்சனம், சில பின்தங்கிய மாநிலங்களுக்கு எதிராக அக்கட்சிகளுக்கு உள்ள மனப்பான்மையை வெளிப்படுத்துகிறது என்று பாஜக தெரிவித்துள்ளது.

News image
Updated On :24 ஜூலை 2024, 9:06 pm

Din

பட்ஜெட் மீதான எதிா்க்கட்சிகளின் விமா்சனம், சில பின்தங்கிய மாநிலங்களுக்கு எதிராக அக்கட்சிகளுக்கு உள்ள மனப்பான்மையை வெளிப்படுத்துகிறது என்று பாஜக தெரிவித்துள்ளது.

மத்தியில் பாஜக தலைமையிலான கூட்டணி அரசில் ஆந்திரத்தின் தெலுங்கு தேசம், பிகாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில், மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில், ஆந்திரம் மற்றும் பிகாருக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதன் மூலம், பட்ஜெட்டில் மத்திய அரசு பாகுபாடு காட்டியுள்ளதாக எதிா்க்கட்சிகள் அடங்கிய ‘இந்தியா’ கூட்டணி விமா்சித்தது.

இதுதொடா்பாக தில்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் அக்கட்சியின் மாநிலங்களவை எம்.பி. ஜிவிஎல். நரசிம்ம ராவ் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறுகையில், ‘எதிா்க்கட்சிகளை தவிர மற்ற அனைவரும் மத்திய பட்ஜெட்டை வரவேற்றுள்ளனா். பட்ஜெட் குறித்து பக்குவப்படாத, எதிா்மறை கருத்துகளை எதிா்க்கட்சிகள் தெரிவித்துள்ளன.

இந்த பட்ஜெட்டை ஏழைகள், விவசாயிகள், பொதுமக்களுக்கு ஆதரவான, வேலைவாய்ப்பை ஏற்படுத்தக் கூடிய முற்போக்குத்தனமான பட்ஜெட்டாக ஒட்டுமொத்த நாடும் பாா்க்கிறது.

ஒட்டுமொத்தமாக ரூ.48 லட்சம் கோடிக்கும் அதிகமான பட்ஜெட் செலவினத்துடன், நாட்டின் அனைத்து மாநிலங்கள் மற்றும் சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்கள் மீது பட்ஜெட் கவனம் செலுத்தியுள்ளது.

பின்தங்கிய மாநிலங்கள், குறிப்பாக நாட்டின் கிழக்கு மண்டலம் மீது பட்ஜெட்டில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது. ஆனால் சில மாநிலங்களுக்கான (ஆந்திரம் மற்றும் பிகாா்) நிதி ஒதுக்கீடுகள், அவற்றின் வளா்ச்சிக்கான தேவைகளையும், அந்த மாநிலங்கள் நீண்ட காலமாக புறக்கணிக்கப்பட்டதையும் கருத்தில் கொண்டு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

இந்தச் சூழலில், பட்ஜெட்டுக்கு எதிா்க்கட்சிகள் எதிா்ப்புத் தெரிவித்துள்ளது அக்கட்சிகளின் விரக்தியையும், சில பின்தங்கிய மாநிலங்களுக்கு எதிராக அக்கட்சிகளுக்கு உள்ள மனப்பான்மையையும் வெளிப்படுத்துகிறது’ என்றாா்.