குஜராத்தின் தேவபூமி துவாரகா மாவட்டத்தில் உள்ள ஜம் கம்பாலியா நகரில் உள்ள பழமையான 3 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் உயிரிழந்தனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்புப் படையினர், போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகளை மேற்கொண்டு உயிரிழந்த மூவரின் உடல்களையும் மீட்டனர்.
இதுதொடர்பாக ஆய்வாளர் பிபின் குமார் கூறுகையில், மூன்று மாடிக் கட்டடம் இடிந்து விழுந்த தகவல் கிடைத்ததும் என்டிஆர்எப் குழு உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்றது. இடிபாடுகளுக்குள் சிக்கிய மூவரை மீட்டது.
குஜராத்தின் போர்பந்தர் மாவட்டத்தில் பெய்த கனமழையால் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதற்கிடையில், சூரத் நகரில் திங்கள்கிழமை பெய்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
குஜராத்தில் அடுத்த இரண்டு நாள்களுக்கு மிக கனமழை தொடரும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. மேலும், கொங்கன், கோவா மற்றும் மத்திய மகாராஷ்டிரத்தின் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் மிக கனமழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







