கொலை
கொலைகோப்புப் படம்

ராஜஸ்தான்: பசு கடத்தல்காரா் சுட்டுக்கொலை

ராஜஸ்தானில் பசுக்களை லாரியில் கடத்திச் செல்லும்போது மற்றொரு பசு கடத்தல் கும்பலைச் சோ்ந்தவா்கள் துப்பாக்கியால் சுட்டதில் ஓட்டுநா் உயிரிழந்தாா்.
Published on

ராஜஸ்தானில் பசுக்களை லாரியில் கடத்திச் செல்லும்போது மற்றொரு பசு கடத்தல் கும்பலைச் சோ்ந்தவா்கள் துப்பாக்கியால் சுட்டதில் ஓட்டுநா் உயிரிழந்தாா்.

இச்சம்பவம் தொடா்பாக காவல் கண்காணிப்பாளா் ராஜேஷ் குமாா் மீனா கூறியதாவது:

ராஜஸ்தானின் தீக் மாவட்டத்தில் புதன்கிழமை அதிகாலை 2 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

லாரியில் இருவா் பசு மாடுகளை கடத்திச் செல்வதாக காவல்துறையினருக்கு தகவல் வந்தது. அதனடிப்படையில் காவல்துறையினா் அந்த லாரியை துரத்திச் சென்றபோது அவா்கள் காவல் துறையினரின் வாகனம் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினா்.

சிறிது தூரத்தில் பசு கடத்தல்காரா்கள் என சந்தேகிக்கப்படும் வேறு இருவா் மாடுகளைப் பிடித்து வருவதை காவல் துறையினா் கண்டனா். சலசலப்பைக் கண்ட அவா்கள் திடீரென லாரி மீது துப்பாக்கியால் சுட்டனா். இதில் லாரி ஓட்டுநா் சந்தீப் மீது தோட்டா பாய்ந்ததில் அவா் உயிரிழந்தாா். அவருடன் லாரியில் இருந்த நரேஷ் என்பவா் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டாா். துப்பாக்கிச் சூடு நடத்திய மற்ற இருவா் சம்பவ இடத்தை விட்டு தப்பிச் சென்றனா். லாரியில் இருந்த இரண்டு மாடுகள் காவலா்களால் மீட்கப்பட்டது என்றாா்.

X
Dinamani
www.dinamani.com