கேரளம்: கோயில் அர்ச்சகருக்கு லாட்டரியில் ரூ. 1 கோடி பரிசு!

கேரளத்தில் மஹா விஷ்ணு கோயில் அர்ச்சகருக்கு லாட்டரியில் ரூ. 1 கோடி பரிசு விழுந்துள்ளது.
கேரளம்: கோயில் அர்ச்சகருக்கு லாட்டரியில் ரூ. 1 கோடி பரிசு!
Published on
Updated on
1 min read

கேரளத்தின் மேப்பாறை பகுதியில் உள்ள மகாவிஷ்ணு கோயிலில் 20 ஆண்டுகளாக தலைமை அர்ச்சகராக பணியாற்றி வரும் மதுசூதனன் வாங்கிய பாதிக்கு பாதி லாட்டரி சீட்டில் ரூ. 1 கோடி பரிசு விழுந்துள்ளது.

மேப்பாறை ஸ்ரீ மகா விஷ்ணு ஆலயத்தின் மேல்சாந்தி எனப்படும் தலைமை அர்ச்சகரான மதுசூதனன், லாட்டரியில் முதல் பரிசை வென்றதன் மூலம், கோடீஸ்வராக மாறியுள்ளார்.

கேரளம்: கோயில் அர்ச்சகருக்கு லாட்டரியில் ரூ. 1 கோடி பரிசு!
இயக்குநராக மீண்டும் வென்றாரா தனுஷ்? ராயன் - திரை விமர்சனம்

தலைமை அர்ச்சகராக 20 ஆண்டுகளாக பணியாற்றிய மதுசூதனன், கிருஷ்ணா லாட்டரி ஏஜென்சியில் இருந்து வாங்கப்பட்ட எஃப்டி 506060 என்ற டிக்கெட்டுடன் பரிசு பெற்றுள்ளார்.

லாட்டரி குலுக்கல்களில் தொடர்ந்து பங்கேற்கும் மதுசூதனன் கடந்த காலங்களில், சிறிய தொகைகளை வென்று வந்துள்ளார். ஆனால், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, அவர் ஒரு இலக்க வித்தியாசத்தால் முதல் பரிசான ரூ.70 லட்சத்தை தவறவிட்டார்.

கேரளம்: கோயில் அர்ச்சகருக்கு லாட்டரியில் ரூ. 1 கோடி பரிசு!
ஆசிய கோப்பை கிரிக்கெட்: வங்கதேசத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்தியா!

மதுசூதனனின் குடும்பத்தில் அவரது மனைவி ஆதிரா, குழந்தைகள் உள்ளனர். ரூ.1 கோடி பரிசு கிடைத்ததால் மதுசூதனன் மற்றும் அவரது குடும்பத்தினர் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். இவரது தெய்வீகப் பணியின் காரணமாகவே அவருக்கு ரூ.1 கோடி பரிசுத்தொகை கிடைத்துள்ளதாக கோயிலுக்கு வரும் பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com