எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

திருத்தப்பட்ட நீட் இளநிலை தேர்வு முடிவுகள் வெளியீடு!

திருத்தப்பட்ட நீட் இளநிலை தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

News image
கோப்புப் படம்
Updated On :26 ஜூலை 2024, 2:55 pm

DIN

சர்ச்சைகுள்ளான திருத்தப்பட்ட நீட் இளநிலை தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

இயற்பியல் கேள்வி ஒன்றிற்கு இரு பதில்கள் சரியானது என்று கருணை மதிப்பெண் வழங்க தேர்வு முகமை அறிவித்ததை ரத்து செய்த உச்சநீதிமன்றம் ஒரு பதில் மட்டுமே சரியானது என்று உத்தரவிட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து திருத்தப்பட்ட தரவரிசைப் பட்டியல் மற்றும் திருத்தப்பட்ட சரியான விடைத்தாள் ஆகியவை தற்போது வெளியிடப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

இதில், முதல் 100 இடங்களில் 10 இடங்கள் வரை தமிழக மாணவர்கள் இடம் பிடித்துள்ளனர்.

முன்னதாக 67 பேர் முதலிடம் பெற்றிருந்த நிலையில், கருணை மதிப்பெண் ரத்து செய்யப்பட்டதால் தற்போது 17 பேர் மட்டுமே 720க்கு 720 பெற்றுள்ளனர். இந்தப் பட்டியலில் தமிழக மாணவர் ரஜ்னீஸ் இடம்பெற்றுள்ளார்.

திருத்தப்பட்ட நீட் இளநிலை தேர்வு மதிப்பெண் பட்டியலைப் பெற இந்த இணைப்பை பயன்படுத்தவும் : https://neet.ntaonline.in/frontend/web/re-revised25july-scorecard/score-card

திருத்தப்பட்ட நீட் இளநிலை தேர்வின் சரியான விடைத்தாளைப் பெற இந்த இணைப்பை பயன்படுத்தவும் :

இந்திய அளவில் இந்த ஆண்டு 67 மாணவர்கள் முதலிடம் பெற்றிருந்தனர். அதில், 6 பேர் கண்காணிப்பாளர்களின் தவறுகளால் தேர்வின் போது இழந்த நேரத்திற்கு கூடுதல் மதிப்பெண்கள் வாங்கிய பட்டியலில் இருந்தனர்.

இயற்பியல் கேள்விக்கு தவறாக விடையளித்து கருணை மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்த 44 பேரின் மதிப்பெண்கள் இப்போது 720க்கு 715 ஆக குறைந்துள்ளது. மேலும் 720க்கு 716 மதிப்பெண்களை 70 பேர் பெற்றுள்ளனர்.

சர்ச்சைக்குரிய நீட் இளநிலை தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்தக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் கடந்த செவ்வாயன்று (ஜூலை 23) தள்ளுபடி செய்தது.

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு, மோசடி போன்ற பெரிய அளவிலான முறைகேடுகள் தொடர்பாக நாடாளுமன்றம் உள்பட நாடு முழுக்க கடுமையான விமர்சனங்களும், எதிர்ப்புகளும் எழுந்தன.

இது தொடர்பான முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரித்து 6 வழக்குகளைப் பதிவு செய்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.