
மத்தியப் பிரதேசத்தில் குடிபோதையில் அரசுப் பள்ளி ஆசிரியர் பள்ளிக்கு வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம், ஷஹதோல் மாவட்டத்தில் உள்ள சங்கர்கர் கிராமத்தில் அரசு தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு பணிபுரியும் ஆசிரியர் உதய்பன் சிங் சனிக்கிழமை குடிபோதையில் பள்ளிக்கு வந்ததாகக் கூறப்படுகிறது.
இதுதொடர்பான விடியோ இணையளதங்களில் வெளியாகி வைரலானது. இந்த விடியோவை கண்ட மாவட்டக் கல்வி அதிகாரி பூல் சிங் மரபாச்சி, இதுகுறித்து விசாரணை நடத்த வட்டார கல்வி அலுவலருக்கு உத்தரவிட்டுள்ளார்.
மேலும் விசாரணை அறிக்கை திங்கள்கிழமை வந்த பிறகு சம்மந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மரபாச்சி தெரிவித்தார். அரசு தொடக்கப் பள்ளிக்கு ஆசிரியர் ஒருவர் குடிபோதையில் வந்த நிகழ்வு அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.