தநவி மும்பையில் உள்ள நகைக்கடையில் ஹெல்மட் அணிந்தபடி நுழைந்த 3 பேர் கொண்ட குடும்பல் துப்பாக்கி முனையில் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் நவி மும்பையில் உள்ள நகைக்கடை ஒன்றில் ஞாயிற்றுக்கிழமை இரவு 10.30 மணியளவில் ஹெல்மட் அணிந்தபடி 3 பேர்கொண்ட கும்பல் நுழைந்தது. பின்னர் அதில் ஒருவர் தன்னிடம் இருந்த துப்பாக்கியால் சுட்டார். அப்போது கடையில் இருந்த அலாரத்தை இயக்க முயன்ற ஊழியரை அந்த கும்பல் தாக்கியது.
3 நிமிடங்களில் நகைகளை கொள்ளையடித்து விட்டு அவர்கள் அந்த இடத்தை விட்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றனர். அந்தநேரத்தில் உள்ளூர்வாசிகள் அந்த கும்பலை துரத்திப் பிடிக்க முயன்றும் முடியவில்லை. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் நவி மும்பை போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
இச்சம்பவம் தொடர்பாக நவி மும்பை காவல்துறை அதிகாரி ஒருவர் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், “கருப்பு உடை அணிந்து, ரிவால்வர்களுடன் கடைக்குள் நுழைந்த மூவரும் ஊழியர்களை மிரட்டி, தாக்கி ரூ.11.80 லட்சம் மதிப்பிலான நகைகளை மூன்று நிமிடங்களில் கொள்ளையடித்துச் சென்றனர்.
அவர்கள் நான்கு முதல் ஐந்து சுற்றுகள் சுட்டனர், ஆனால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றார். கொள்ளை சம்பவம் குறித்து சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குற்றம் சாட்டப்பட்ட மூவரையும் கைது செய்வதற்கான முயற்சிகள் தொடங்கப்பட்டுள்ளன என்று அந்த அதிகாரி மேலும் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கண்டெய்னா் லாரியில் செம்மரம் கடத்தல்: துப்பாக்கி முனையில் 4 போ் கைது!

துப்பாக்கி முனையில் மிரட்டியது காவல் துறை: கைதான திமுக எம்.எல்.ஏ. கூச்சல்!
துப்பாக்கி முனையில் ரூ.16.5 லட்சம் கொள்ளை வழக்கு: ஒருவன் கைது; ரூ.2.5 லட்சம் மீட்பு

துப்பாக்கி முனையில் ஜிஎஸ்டி அதிகாரி வீட்டில் கொள்ளை: பட்டப்பகலில் துணிகரம்!
விடியோக்கள்

தவெக அரசின் முதல் பட்ஜெட்: மதுரை மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன? | Budget | TN Budget |





