புது தில்லி: கேரளத்தின் வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவின் மீட்புப் பணிகளில் இந்திய ராணுவம் ஈடுபட்டுள்ளது. இதுதொடா்பாக ராணுவத் தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதியுடன் பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினாா்.
கேரள மாநிலம், வயநாட்டின் சூரல்மலை பகுதியில் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி மண்ணில் புதையுண்டு பலா் உயிரிழந்தனா்.
இதையடுத்து, மீட்புப் பணிகளில் தேசிய, மாநில பேரிடா் மீட்புப் படையினருக்கு உதவ ராணுவத்திடம் மாநில அரசு கோரிக்கை விடுத்தது. அதன்பேரில், மருத்துவப் பணியாளா்கள் உள்பட 225 ராணுவ வீரா்கள் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா்.
நிலச்சரிவு சம்பவத்தின் ஒட்டுமொத்த நிலைமை குறித்து ராணுவத் தலைமைத் தளபதியிடம் பாதுகாப்பு அமைச்சா் கலந்தாலோசித்து தகவல்களைக் கேட்டறிந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
அதேபோல, மீட்புப் பணிகளுக்காக கோவை, சூலூா் விமானப் படைத் தளத்திலிருந்து 2 ஹெலிகாப்டா்கள்அனுப்பப்பட்டன. எனினும், நிலச்சரிவு பகுதியில் நிலவும் மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டா்கள் தரையிறங்கி, மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதில் சிக்கல் ஏற்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


