
கேரளத்தில் வயநாடு மாவட்டத்தின் வெவ்வேறு இடங்களில் பெய்துவரும் தொடர் கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவில் சிக்கி இரு குழந்தைகள் உள்பட 45 பேர் பலியாகினர். நிலச்சரிவில் சுமார் 100க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளதாக அஞ்சப்படுகிறது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துள்ள மீட்புப்படையினர் மண்ணுக்கடியில் புதைந்துள்ளவர்களை மீட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், நிலச்சரிவில் உயிரிழந்தோருக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். நிலச்சரிவில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு பிரதமர் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சம் வழங்கப்படும் என்றும், காயமடைந்தோருக்கு ரூ. 50,000 வழங்கப்படும் என்றும் பிரதமர் அறிவித்துள்ளார்.
வயநாட்டில் நிகழ்ந்துள்ள அசம்பாவிதம் மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளதாகவும், மீட்ப்புப் பணிகளில் தேவைப்படும் அனைத்து உதவிகளையும் வழங்கிட மத்திய அரசு தயாராக இருப்பதாக மாநில முதல்வர் பினராயி விஜயனிடம் தெரிவித்திருப்பதாக பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.